வெண்டளையான் ஆன எண்சீர் விருத்தம்

கண்ணே அமுதே !
கனிச்சுவையே தேனே .
கதியெனவே நின்றுனைக்
காதலிப்பேன் நானே !
பெண்ணே அழகே !
பெருமைமிகு சீரே .
பெருந்தெய்வம் பேசாதோ
பேரெழிலே நீயே !
விண்ணே மதியே !
வியன்பொருளே மானே !
விடிவெள்ளி நீயன்றோ
விந்தைகள் செய்வாய் .
பண்ணே தமிழே !
பசுமைகீதம் பாடு
பரவசமாய் நேசிப்பேன்
பார்த்துனை யன்றோ ?

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Dec-16, 5:17 pm)
பார்வை : 55

மேலே