நன்றி - பூவிதழ்
மழை தந்த வானுக்கும்
மேகம் தந்த கடலுக்கும்
குளிர் கற்று தந்த மலைக்கும்
மலை தந்த மரத்துக்கும்
மரம் நட்ட நல்ல மனிதனுக்கும்
பயிர் நட்டு களை பறித்து
நீர் பாய்ச்சி கதிர் அறுத்த கைகளுக்கு
உரம் தந்து உழவுக்கும் உணவுக்கும்
உழைத்திட்ட எருதுகளுக்கு
உலகுக்கு ஓளிதந்து
பயிருக்கு உயிர் தந்த பகலவனுக்கு
மண்ணாய் மரமாய்
நதியாய் கடலாய்
மலையாய் வான் மழையாய்
நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும்
நன்றி! நன்றி ! நன்றி !