நிழலின் நிஜம்

மூணாவது படிக்கையில
ஆத்தாளோட சுள்ளி பொறுக்க போய்
கஷ்டபடரப்ப
செத்து போற மாதிரி இருந்துச்சு,

ஐந்தாவது போகயில
ஆதாளையு எண்ணையு
விட்டுட்டு போன
அப்பன்கூடையே - நானு
செத்துரலாமுன்னு தோணிச்சி,

வயசுக்கு வந்து
ஆறு வருசமா - எவனும்
சீண்டாதப்ப அத நெனச்சு
எட்டிக் காய தின்னு
செத்துரலாமுன்னு நெனச்சே,

எப்படியோ வாக்கப்பட்டு
ரண்டு புள்ள பெத்துக்கரதுக்குள்ள
செத்து பொலச்செ

இந்த குடிகார ஆள வெச்சுட்டு
இதுக ரண்டையும் காப்பாத்த
காடு மேடெல்லாம் சுத்துரப்ப
ஆண்டவா இந்த உசுர
எடுத்துக்க மாட்டயான்னு தோனிச்சு

அதுக ரண்டும் கரையேறி
வாயில வராத சீமைக்கு
வேலைக்கு போயிடுசுக
எனக்கு சந்தோசந்தே - இருந்து
ஆத்தாள மறந்துட்டானுக

ஆயிடுச்சு எனக்கு
வயசு எழுபத்தி ரண்டு
கேக்க நாதியில்ல
சோத்துக்கே வழியில்ல
நாளைக்கு - ஒரு வேள
கஞ்சிதா கெடைக்குது
செத்து போயிரலாந்தா
மனசு கேக்க மாட்டேங்குது

கெழட்டு கட்டைக்கு
இப்பதா - வாழணும்னு
ஆசை வந்திருக்கு..?

எழுதியவர் : Amirthaa (18-Jan-14, 2:52 pm)
Tanglish : nizhalin nijam
பார்வை : 129

மேலே