ஜல்லிக்கட்டு

ஐல்லிக்கட்டு

எங்களுடன் வாருங்கள்
எங்களின் வீர விளையாட்டைப் பாருங்கள்
பாரம்பரியம் பொருள் உணருங்கள்
ஆகையால்.....
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்

உண்மைதனை பாருங்கள்
"யாரோ" சொல்வதை புறம் தள்ளுங்கள்
சொந்தக்காரர்கள் நாங்களே
ஆகையால்......
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்

எம் உணர்வுகளை மதியுங்கள்
உணர்ச்சிகளைப் போற்றுங்கள்
விதண்டாவாதம் தவிருங்கள்
ஆகையால் .......
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்

சேரும் கூட்டம்தனை பாருங்கள்
இது அரசியல் சாரா அமைப்புகள்
எங்கள் மாணவ செல்வங்களின்
கையைப் பிடியுங்கள்
ஆகையால்.........
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்

இது எங்கள் பாட்டன், முப்பாட்டன்
விட்டுச் சென்ற சொத்துக்கள்
வழி வழியாய் வந்த அரிய விளையாட்டுக்கள்
ஒரு நொடியில் அழிக்காதீர்கள்
ஆகையால்.......
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்

இது அமைதியான ஆர்ப்பாட்டங்கள்
இதில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்
விளையாட்டை அகலக் கண் கொண்டு பாருங்கள்
ஆகையால்.........
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்

இந்த விளையாட்டின் மகிமையைப் புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் ஆதரவை உடனே தாருங்கள்
எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள்
ஆகையால்.......
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்

நாங்கள் சொல்வதெல்லாம் உண்மைகள்
எங்களை முழுக்க நம்புங்கள்
சூழ்நிலையின் வீரியத்தை மனதில்
கொள்ளுங்கள்
ஆகையால்........
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்

தமிழனின் பண்பை நினைவில்
வையுங்கள்
விலங்குகள் எங்கள் நண்பர்கள்
அவைகள் என்றும் எங்கள் சொந்தங்கள்
ஆகையால்.......
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்

கண்மூடித் தனமாய் இருக்காதீர்கள்
எங்கள் பக்கம் வாருங்கள்
உண்மை நிலையை கேட்டு
அறியுங்கள்
ஆகையால்.......
தமிழன் சொல்வதைக் சற்று
செவிமடுத்துக் கேளுங்கள்

தேதி - 19.01.17   நேரம் - விடிகாலை 12 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (20-Jan-17, 10:02 pm)
Tanglish : jallikkattu
பார்வை : 146

மேலே