கவிதை எழுத நினைத்தேன்
அவளைக் கண்ட பிறகு
கவிதை எழுத நினைத்தேன் - ஆனால்
எழுதுவதை நிறுத்த தோன்றவில்லை
இன்னும் எனக்கு!
பெண்களைப் பற்றி பலர்
வர்ணித்து எழுதியது உண்டு - ஆனால்
அவள் கண்களைப் பற்றி எழுத
வார்த்தைகள் போதவில்லை எனக்கு!
அவள் சின்னஞ்சிறு சிணுங்களில்
அவள் உணர்ந்தாளோ இல்லையோ
நான் உணர்ந்தேன் என் இதயம்
குலுங்கியதை!
அவள் தலையசைக்கும் ஜதிக்கேற்ப்ப
அங்குமிங்கும் அசைந்தாடும்
கம்மல் கண்டு என் உள்ளமும்
ஆடுவதை அறிவாளோ!
கவிதையில் கற்பனை கலந்தால்
அழகாகும் என்பார்கள்- அவர்களுக்கு
ஏனோ தெரியவில்லை உன்னைப் பற்றி
எழுதினாலே அது கவிதையாகும் என்று!