ரா விவேக் ஆனந்த் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரா விவேக் ஆனந்த் |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 25-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 117 |
புள்ளி | : 5 |
மின்சாரம் துண்டிக்கப்பட்டதும்
அழ ஆரம்பிக்கிறது
மெழுகுவா்த்தி..!
***
நகரும் விண்மீன்களை
தாங்கியபடியே இருக்கிறது
இரவில் நெடுஞ்சாலை..!
***
உன்னைப்போலவே
எப்படியும் என்னில்
ஓர் முத்தக் கவிதையை
விதைத்துவிட்டே செல்கிறது
இம்முத்து மழையும்..!
***
புள்ளிகளிட்டு கோலமிட்டபின்
கோலமழித்து புள்ளிகளை மட்டும்
விட்டுச்செல்கிறது
என்னுள் நின் நினைவுகளை போலவே
கண்ணாடியில் மழை..!
***
இப்பொழுது நாம் மழையில்
சிக்கிக்கொண்டுள்ளோம்..!
இனி மழை நம்மில்
சிக்கிக்கொள்ளும்..!
***
யாசகச்சிறுமி
என்னிடம் தந்து செல்கிறாள்
ஒரு கவிதை..!
அன்புக்காதலனுக்கு,
அகத்தினை வடித்திட நானும் அயராது தேடுகிறேன்
அகராதியிலும் அகப்படவில்லை வார்த்தைகள்..!!
அங்குமிங்குமாய் எழுத்துக்களை இழுத்துப்பிடித்து
எழுதுகிறேன் இக்கடிதம்..!!
ஆசை நாயகனே..!!
நீளும் ஆசைகளில் உன் நீங்கா நினைவுகள்
நாளும் வளர்ந்து வந்து என்னை தேளாய் கொட்டுகிறது..!
கொஞ்சி விளையாடி குறும்பு செய்தே உன்னை வென்றிட வேண்டுமென்று
வஞ்சியெனக்கு வாலும் வளர்ந்துகொண்டிருக்கிறது..!
நின் முத்தங்களை சுமந்துவந்த முத்திரைத்தாளெல்லாம்
என் மூச்சுக்காற்றில் வாடுகிறது..!
நாணம் விடுத்து நானும் உன் மீசை கடித்தே
என் ஆசை தீர்க்க அனுமதி கேட்கிறேன்..!
அஞ்சனம் தீட்டிய
அன்புக்காதலனுக்கு,
அகத்தினை வடித்திட நானும் அயராது தேடுகிறேன்
அகராதியிலும் அகப்படவில்லை வார்த்தைகள்..!!
அங்குமிங்குமாய் எழுத்துக்களை இழுத்துப்பிடித்து
எழுதுகிறேன் இக்கடிதம்..!!
ஆசை நாயகனே..!!
நீளும் ஆசைகளில் உன் நீங்கா நினைவுகள்
நாளும் வளர்ந்து வந்து என்னை தேளாய் கொட்டுகிறது..!
கொஞ்சி விளையாடி குறும்பு செய்தே உன்னை வென்றிட வேண்டுமென்று
வஞ்சியெனக்கு வாலும் வளர்ந்துகொண்டிருக்கிறது..!
நின் முத்தங்களை சுமந்துவந்த முத்திரைத்தாளெல்லாம்
என் மூச்சுக்காற்றில் வாடுகிறது..!
நாணம் விடுத்து நானும் உன் மீசை கடித்தே
என் ஆசை தீர்க்க அனுமதி கேட்கிறேன்..!
அஞ்சனம் தீட்டிய
நாம் அறுசுவை உணவுண்ண
அரை வயிற்றுக் கஞ்சி குடிப்பான்
விவசாயி
ஐபோனோ ஆண்டிராய்டோ
செயலியைக் கொண்டு செய்ய முடியாது விவசாயத்தை
சேற்றினில் கால் பதித்து விவசாயி நாற்று நட்டால் தான்
நாம் சோற்றினில் கை வைக்க முடியும்
பாடுபட்டு நிலத்தை பண்படுத்தி
வானம் பார்த்த மண்ணை நம்பி
நெல் விதைத்து
இரவோடும் பகலோடும் நீர்
இரைத்து காத்திருப்பான்
நெல் வளர
மழை தப்பிப் போனாலோ
பயிர் வாடி நின்றாலோ
அவன் உயிர் நாடி நின்றுப் போகும்
இவ்வளவும் செய்த பிறகு
அறுவடையும் முடிந்த பிறகு
அவனுக்கென்று ஏதுமில்லை
கொடுப்பதெல்லாம் நமக்குத் தான்
விவசாயம் அவனுக்கு தொழிலல்ல
அதுவே அவன் குல தெய்வம்
விவசாயி இல்லை என்றால்
வ
நாம் அறுசுவை உணவுண்ண
அரை வயிற்றுக் கஞ்சி குடிப்பான்
விவசாயி
ஐபோனோ ஆண்டிராய்டோ
செயலியைக் கொண்டு செய்ய முடியாது விவசாயத்தை
சேற்றினில் கால் பதித்து விவசாயி நாற்று நட்டால் தான்
நாம் சோற்றினில் கை வைக்க முடியும்
பாடுபட்டு நிலத்தை பண்படுத்தி
வானம் பார்த்த மண்ணை நம்பி
நெல் விதைத்து
இரவோடும் பகலோடும் நீர்
இரைத்து காத்திருப்பான்
நெல் வளர
மழை தப்பிப் போனாலோ
பயிர் வாடி நின்றாலோ
அவன் உயிர் நாடி நின்றுப் போகும்
இவ்வளவும் செய்த பிறகு
அறுவடையும் முடிந்த பிறகு
அவனுக்கென்று ஏதுமில்லை
கொடுப்பதெல்லாம் நமக்குத் தான்
விவசாயம் அவனுக்கு தொழிலல்ல
அதுவே அவன் குல தெய்வம்
விவசாயி இல்லை என்றால்
வ
சின்னச் சின்னதாய் தூறல்
என் நெஞ்சுக்குள்ளே வந்து
தூவ!
மெல்லமாய் வீசிடும் காற்று
என்னைச் செல்லமாய்
தழுவிட!
நான் என்னை மறந்தேனே..
இன்று விண்ணில் பறந்தேனே..
கருமேகம் சேர்ந்து வந்து
நூறு மேள தாளம்
இசைக்க!
மின்னல் தந்த ஒளியில்
நான் கண்கள் கூசி
நிற்க!
நான் உன்னை ரசித்தேனே..
இம் மண்ணை ரசித்தேனே..
சின்னச் சின்னதாய் தூறல்
என் நெஞ்சுக்குள்ளே வந்து
தூவ!
மெல்லமாய் வீசிடும் காற்று
என்னைச் செல்லமாய்
தழுவிட!
நான் என்னை மறந்தேனே..
இன்று விண்ணில் பறந்தேனே..
கருமேகம் சேர்ந்து வந்து
நூறு மேள தாளம்
இசைக்க!
மின்னல் தந்த ஒளியில்
நான் கண்கள் கூசி
நிற்க!
நான் உன்னை ரசித்தேனே..
இம் மண்ணை ரசித்தேனே..
குளிர்நீர் குளத்தினில் நீராடிய குயவன்செய்த பதுமையிவள்
தளிர்துளிரும் அருகம்புல்லுக்கு தனதுடல் அறியாதவாறு மென்னாடைமூடிச் சென்றாள்...
கொட்டகொட்ட விழித்திருக்கும் கயல்மீன்கள் அவள்மீது காதல்தொடுக்க
தட்டிவிட்டு தரையேறி சுயம்காத்து மெல்லநடந்தாள்...
இன்னலுற்ற அருகம்புற்கள் இவளிடைகண்டு ஆடைதரமறுக்க
பின்னலில் கழன்ற ஒற்றைச்சிகை பிதற்றிக்கொண்டு அதனைத்தாக்க...
தப்பிச்செல்ல இவளுக்கு உயிர்நீத்த ஒற்றைச்சிகை
தவங்கள் பலவிருந்துதான் இவளின் சிரமேறியிருக்குமோ...! - என
அருகம்புற்களில் வெளிப்படும் ஐயங்களே ஆயிரமிருக்க
அவ்வழிச் செல்லும் அந்தனனெனக்கு அந்த ஒற்றைச்சிகையாவது கிட்டிடுமா...?
#தவம்
அனல் என்னை அணைத்துக்கொண்டிருக்க
என் தேகம் எரிந்து கொண்டிருக்கிறது..!
உயிரைத்தவிர உடன் எவருமில்லை..!
உமிழ்நீரும் உதவ வரவில்லை..!
விழியிரண்டும் விம்மிக்கொண்டிருக்க
மொழிவாரது எதையோ முனகிக்கொண்டிருக்கிறேன்..!
என் உணர்வுகள் ஏனோ உறைய மறுக்க..!
என் சிரமமறிந்து சிரம் சிலையாய் கிடக்க..!
எண்ணம் முழுதும் உன் நினைவுத்தீயில் உருக..!
என் காதலும் அதில் விழுந்து கருக..!
சிந்தையில் உன் முகம் தெளிவாய் தெரிய
அன்பிற்கு ஏங்கும் ஓர் அனாதையாய் கிடக்கிறேன்..!
உடல் அசௌகரியமாக இருந்தாலும்
மனம் தேடுவதென்னவோ உன் அருகாமையையே..!
மரத்துப்போகும் மருந்தெதற்கு
நீ தந்த வலியைவிடவா வலித்துவி
நான் துவண்டுபோகையில்
துன்பம் என்னிடம் கேட்கிறது..!!
நான் தவித்திருக்கையில்
தனிமை என்னிடம் கேட்கிறது..!!
நான் வருந்தியிருக்கையில்
வலி என்னிடம் கேட்கிறது..!!
நான் மகிழ்ந்திருக்கையில்
என் மனம் என்னிடம் கேட்கிறது..!!
எங்கே நீ...!!
சீறிப்பாய நான்கு கால்கள்
அடக்கிப் பார்க்க இரண்டு கைகள்
துடிக்குது
எதிரிக் கூட்டம் மிரண்ட ஓட
எதிர்த்து நிற்கும் படைகள் வீழ
நினைக்குது
கட்டி வைத்து வெட்டிக் கொல்ல
நாங்கள் ஒன்றும் கோழையல்ல
பாசம் காட்டி வளர்த்து வர
எங்கள் போல் யாருமல்ல
பிள்ளையும் காளையும்
எங்களுக்கு வேறல்ல
சேர்த்தே பார்ப்போம்
சொல்லையும் பொருளையும் போல
புழுதி பறக்க, செந்தனல் தெறிக்க
சீறி வரும் காளை
தோள்களில் தினவிருந்தால் நெஞ்சில் உரமிருந்தால்
எடுத்து வை உன் காலை
சீறிப் பாயும் காளையோ
சினம் கொண்ட சிங்கமோ
அடக்கி ஆள்வதே எங்கள் குலம்
எங்களை அடக்கிப் பார்த்த நினைத்தாலோ
எதிர்த்து நிற்பதே எங்கள் குணம்
அவளைக் கண்ட பிறகு
கவிதை எழுத நினைத்தேன் - ஆனால்
எழுதுவதை நிறுத்த தோன்றவில்லை
இன்னும் எனக்கு!
பெண்களைப் பற்றி பலர்
வர்ணித்து எழுதியது உண்டு - ஆனால்
அவள் கண்களைப் பற்றி எழுத
வார்த்தைகள் போதவில்லை எனக்கு!
அவள் சின்னஞ்சிறு சிணுங்களில்
அவள் உணர்ந்தாளோ இல்லையோ
நான் உணர்ந்தேன் என் இதயம்
குலுங்கியதை!
அவள் தலையசைக்கும் ஜதிக்கேற்ப்ப
அங்குமிங்கும் அசைந்தாடும்
கம்மல் கண்டு என் உள்ளமும்
ஆடுவதை அறிவாளோ!
கவிதையில் கற்பனை கலந்தால்
அழகாகும் என்பார்கள்- அவர்களுக்கு
ஏனோ தெரியவில்லை உன்னைப் பற்றி
எழுதினாலே அது கவிதையாகும் என்று!