தவம்
குளிர்நீர் குளத்தினில் நீராடிய குயவன்செய்த பதுமையிவள்
தளிர்துளிரும் அருகம்புல்லுக்கு தனதுடல் அறியாதவாறு மென்னாடைமூடிச் சென்றாள்...
கொட்டகொட்ட விழித்திருக்கும் கயல்மீன்கள் அவள்மீது காதல்தொடுக்க
தட்டிவிட்டு தரையேறி சுயம்காத்து மெல்லநடந்தாள்...
இன்னலுற்ற அருகம்புற்கள் இவளிடைகண்டு ஆடைதரமறுக்க
பின்னலில் கழன்ற ஒற்றைச்சிகை பிதற்றிக்கொண்டு அதனைத்தாக்க...
தப்பிச்செல்ல இவளுக்கு உயிர்நீத்த ஒற்றைச்சிகை
தவங்கள் பலவிருந்துதான் இவளின் சிரமேறியிருக்குமோ...! - என
அருகம்புற்களில் வெளிப்படும் ஐயங்களே ஆயிரமிருக்க
அவ்வழிச் செல்லும் அந்தனனெனக்கு அந்த ஒற்றைச்சிகையாவது கிட்டிடுமா...?
#தவம்