காதல்
கிள்ளித் தெறியும் உணர்வு
கிள்ளாமலே தெறியும்
காதல் உணர்வு
சொல்லி வருவதில்லைக் காதல்
சொல்லாமல் நிகழ்வதே காதல்
உள்ளத்தில் உறங்குவது காதல்
விழியாம் திறவுகோலால்
உள்ளத்தை திறந்தால்
உறங்கிடும் காதலை
தட்டி எழுப்பிடலாமே
ஆயின் இன்னார்க்கு
இன்னார் மீது காதல்
வந்து தாக்கும் என்பது
தேவன் வகுத்த விதி
விதி மீறி
காதல் வருவதில்லை
இதை அறியாது
நடப்போர் படுவார்
துன்பம் ஏனெனில்
சொல்லி வருவதில்லைக் காதல்
அது சொல்லாமல் நிகழ்வது;
கால்கள் உள்ளார் எல்லாம்
ஓட்டத்தில் உசைன் போல்ட் ஆவதில்லை
அது போல
எல்லார்க்கும் காதல் கிட்டுவதில்லை
நல்லதோர் காதல்
' அவன் ' தந்த வரப்பிரசாதம்.
சொல்லாமல் நிகழ்வதே காதல்