முதல் முத்தம்

முதல் முதல் உன்
முத்த மழையில்
என்னை நீ நனைத்த போது..

உன் முதல் முத்தம்
என் மனதில் முத்திரையாய்
பதிந்தே போனதடி...

என் நித்திரையில் நீ மட்டும்
சிலையாய், சித்திரமாய்,
சிற்பமாய் தெரியுதடி...

கரும்பாய் கற்கண்டாய்
இனிக்கவே நீ மட்டும் என்
கட்டிலை அலங்கரிக்க வேண்டுமடி..

காத்திருக்கும் என் மனதை
கொஞ்சம் நீ கொஞ்சியே
பேசிடுடி......

ஏங்கியே தவிக்கும் என்னை
எப்படியாவது வந்து
ஆசைகளை தீர்த்து வையடி.....

எழுதியவர் : மன்சூர் அலி ஆவடி சென்னை (22-Oct-16, 11:43 am)
Tanglish : muthal mutham
பார்வை : 64

மேலே