கிறுக்கியின் கிறுக்கல்கள் - 11
மின்சாரம் துண்டிக்கப்பட்டதும்
அழ ஆரம்பிக்கிறது
மெழுகுவா்த்தி..!
***
நகரும் விண்மீன்களை
தாங்கியபடியே இருக்கிறது
இரவில் நெடுஞ்சாலை..!
***
உன்னைப்போலவே
எப்படியும் என்னில்
ஓர் முத்தக் கவிதையை
விதைத்துவிட்டே செல்கிறது
இம்முத்து மழையும்..!
***
புள்ளிகளிட்டு கோலமிட்டபின்
கோலமழித்து புள்ளிகளை மட்டும்
விட்டுச்செல்கிறது
என்னுள் நின் நினைவுகளை போலவே
கண்ணாடியில் மழை..!
***
இப்பொழுது நாம் மழையில்
சிக்கிக்கொண்டுள்ளோம்..!
இனி மழை நம்மில்
சிக்கிக்கொள்ளும்..!
***
யாசகச்சிறுமி
என்னிடம் தந்து செல்கிறாள்
ஒரு கவிதை..!