முத்தங்களின் அலைவரிசை
கன்னங்களில்
முத்தம் விதைத்துப் போகிறாய்
எச்சிலில் முளைக்கிறது
ஈரப் பரவசம்
என் உதட்டுக் கடிதத்தில்
உன் உதட்டு முத்திரை
அஞ்சல் செய்யப்படுகிறது
காதல்
எந்த இனிப்பும்
சமமாகவில்லை
முத்த இனிப்புக்கு
உயிரை
உறிஞ்சிக் குடிப்பதற்கு
முத்தத்தால் மட்டுமே
முடியும்
முத்தங்களின் அலைவரிசை
முடிவதேயில்லை
மூச்சு முட்டிப் போகிறது
பித்தங்கொண்ட மனம் !
@இளவெண்மணியன்