ஜல்லிக்கட்டு நம் அடையாளம்

சீறிப்பாய நான்கு கால்கள்
அடக்கிப் பார்க்க இரண்டு கைகள்
துடிக்குது

எதிரிக் கூட்டம் மிரண்ட ஓட
எதிர்த்து நிற்கும் படைகள் வீழ
நினைக்குது

கட்டி வைத்து வெட்டிக் கொல்ல
நாங்கள் ஒன்றும் கோழையல்ல
பாசம் காட்டி வளர்த்து வர
எங்கள் போல் யாருமல்ல

பிள்ளையும் காளையும்
எங்களுக்கு வேறல்ல
சேர்த்தே பார்ப்போம்
சொல்லையும் பொருளையும் போல

புழுதி பறக்க, செந்தனல் தெறிக்க
சீறி வரும் காளை
தோள்களில் தினவிருந்தால் நெஞ்சில் உரமிருந்தால்
எடுத்து வை உன் காலை

சீறிப் பாயும் காளையோ
சினம் கொண்ட சிங்கமோ
அடக்கி ஆள்வதே எங்கள் குலம்
எங்களை அடக்கிப் பார்த்த நினைத்தாலோ
எதிர்த்து நிற்பதே எங்கள் குணம்

மாட்டோடு மல்லுக் கட்ட - வேண்டும்
நமக்கு ஜல்லிக்கட்டு
நாட்டுக்கு சொல்லிக் காட்ட - வேண்டும்
நமக்கு ஜல்லிக்கட்டு

எழுதியவர் : ரா.விவேக் ஆனந்த் (20-Jan-17, 10:10 pm)
சேர்த்தது : ரா விவேக் ஆனந்த்
பார்வை : 313

மேலே