தமிழன்டா
இது எங்க ஜல்லிக்கட்டு
எதிர்க்குறவன ஓரங்கக்கட்டு
துட்டுக்கு ஆடும் பீட்டாக்கு
தெரியுமா எங்க பாரம்பரிய கோட்ப்பாடு
தமிழனை சீண்டிக்கிட்டு
போனா,, போய்டுவ மானம்கெட்டு,,,
வாங்கித்தாறோம்
கமரக்கட்டு -அத
வாங்கிகிட்டு எங்க
நாட்டைவிட்டு
நடையக்கட்டு....
அரசியல் நரிகளின் பேச்சைக்கேட்டு
ஆடி பாக்காத தறிகெட்டு
மாணவர்களின் மாவீரத்தை தொட்டுட்டு
உனக்கு நீயே வச்சுக்காத வேட்டு..!!
இது எங்க ஜல்லிக்கட்டு
வீர தமிழனுக்கு எடுத்துக்காட்டு
சூளுரைப்போம் நெஞ்ச நிமிர்த்துக்கிட்டு
இது எங்க பாட்டன், முப்பாட்டன் தொட்டு
தொடரும் வீர விளையாட்டு
எங்கள் இளங்காளைகளின்
கோவப்பசிக்கு
பீட்டாவே புல்லுக்கட்டு
தமிழனை சீண்டியவனை
தூக்க ....மக்கா
பாடையக்கட்டு...
தமிழனை தமிழனாக
வாழவிடு
மீறினால் காட்டுவோம்
தமிழனென்றால் யாரென்று
இந்த உலகுக்கு ...
என்றும் ...என்றென்றும்
ஜீவன்