உன்னை ரசிக்கும் பொழுது

சின்னச் சின்னதாய் தூறல்
என் நெஞ்சுக்குள்ளே வந்து
தூவ!
மெல்லமாய் வீசிடும் காற்று
என்னைச் செல்லமாய்
தழுவிட!
நான் என்னை மறந்தேனே..
இன்று விண்ணில் பறந்தேனே..
கருமேகம் சேர்ந்து வந்து
நூறு மேள தாளம்
இசைக்க!
மின்னல் தந்த ஒளியில்
நான் கண்கள் கூசி
நிற்க!
நான் உன்னை ரசித்தேனே..
இம் மண்ணை ரசித்தேனே..

எழுதியவர் : ரா.விவேக் ஆனந்த் (9-Feb-17, 10:31 pm)
சேர்த்தது : ரா விவேக் ஆனந்த்
பார்வை : 180

மேலே