பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள்

கரிசல் நிலத்தில் களம் அமைத்து பாத்தி கட்டி
கதிரவன் ஒளியும் கார்முகில்துணையும் கொண்டு
வந்த நீரினால் வளம் பெற வாய்க்கால் வெட்டி
கழனி இறங்கி கால் வலிமையில் பதம் செய்து
விதை விதைத்து உரம் இறக்கி காத்திருந்து
நாத்து நட்டு களை களைந்து காவலிருந்து
காலம் கனிந்ததும் கதிர் அறுத்து பதர் அடித்து
நெல்மணிகளை கூட்டி அளந்தெடுத்து வைத்து
உழவர் குழாம் யாவையும் உல்லாசமாய் சேர்ந்து
தைமாதம் பிறந்ததென தமிழினம் யாவையும்
புதுக்கதிரை புதுப்பானையில் பொங்கி எடுத்து
பகலவனுக்குப் படைத்து வணங்கி விழாவாக
பொங்கலோ பொங்கல் என்று கூவி அழைத்து
உற்சாகமாக கொண்டாடிடும் திருநாளிதுவே!!!!!!

எழுதியவர் : கே என் ராம் (13-Jan-19, 8:19 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : pongal thirunaal
பார்வை : 79

மேலே