தரம் காப்போம்

தடையை தகர்க்க புறப்படு
தரத்தை காக்க பாடுபடு
குழுவாய் இணைந்து செயல்படு
முழுதாய் தரத்தை பெற்றுவிடு

தரத்தின் வழிகள் கற்றுவிடு
செயலின் திறனை கூட்டி விடு
சிந்தையை செயலை இணைத்து விடு
இழப்பை பொறுப்பாய் சிதைத்து விடு

தரத்தை உயர்வாய் தூக்கி விடு
சாதனை அதனில் பதித்து விடு
மக்கள் மனதில் பதியவிடு
சந்தையில் புகழை பரவவிடு

புதுமை செய்யும் நோக்கோடு
பணிகள் செய்வாய் புகழோடு
முழுதாய் அதனில் இணைந்து விடு
தொழிலும் நிலைக்கும் சிறப்போடு

எழுதியவர் : ந. அலாவுதீன் (13-Jan-19, 8:37 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : THRAM kaappom
பார்வை : 157

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே