ஏழைப் பிள்ளையின் போகி

நீங்கள்
மனையில் இருந்த
வேண்டாதவற்றை எரித்துக்கொண்டிருந்தீர்

நான்
என் மனதில் இருந்த
வேண்டாதவற்றை
எரிக்க முயற்சித்தேன்

நீங்கள்
பழையன எரித்து
குளிர் காய்ந்தீர்

நானோ
பகலவன் நனைத்துக்
குளிர் காய்ந்தேன்

நீங்கள்
எரித்து முடித்த
மிச்சத் துணிகள்
என் அலமாரியை
அலங்கரித்தன

நீர் தூக்கி வீசிய
பேனா என் தாளில்
கவிதைகளைத்
தூக்கி வீசியது

உங்கள்
உடல்
குளிர்காய்ந்தது
என் வயிறு
பசியால் காய்ந்தது

வேண்டாதவற்றை
கொளுத்த வேண்டும் என்றால்
என் குடிசையைத்தான்
நான் கொளுத்த வேண்டும்

பெண் கொடுமை
செய்யும் பொருக்கி
அழிந்து எரியும்
நாள்தான் எனக்கு போகி

எழுதியவர் : குமார் (12-Jan-19, 2:56 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 95

மேலே