வானமே காற்றே
வானமே! காற்றே!
==============================================ருத்ரா
என்னை நீ
நினைத்துக்கொண்டே இருக்கிறாய்
என்று
இந்தக் காற்று சொல்லியது.
உன் நினைவில் நான் தான்
என்று
இந்த வண்டும் சொல்கிறது.
உன் பரந்த உள்ளம்
ஒரு புள்ளியில் ஒடுங்கியதே
அது நான் தான்
என்று
இந்த வானம் செப்பியது.
அதனால் தான் நான்
இப்போது உன்னிடம் கேட்கிறேன்.
உதடு பிரித்து
ஒலிப்பதற்குள்
அந்த வினாடியின்
கோடியில் ஒரு துளிக்குள்
ஒளிந்து ஒளிந்து விரைந்து விட்டாயே!
நீ
சிறிதிலும் சிறிதாய்
அந்த அருகம் புல்லையும்
பிளந்து ஆயிரம் கீற்றாக்கி
ஒரு கீறலை
சாரலாய் தூவிவிட்டு ஓடிவிட்டாய்.
உன்னைக்கேட்க
விரிந்த என் உதடுகள்
ஒரு வானமாய் காற்றாய்
ஒன்றும் இல்லாத மௌனமாய்
உறைந்து விட்டன.
===============================================
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
