சேலை பாக்கியம்

என் காதலுக்கு
முதல் எதிரி
யார் தெரியுமா..
ஏக்கத்தோடு
சொல்கிறேன்
கேட்டுக்கொள்..

என்னை ஏங்க
வைத்ததுமில்லாமல்
எப்போதும்
உன்னோடு
ஒட்டி உறவாடிக்
கொண்டிருக்கும்
உன் சேலை தான் !!!

அது
உன் உடலைத்
தழுவி இடைதனை
சுற்றி வளைத்து
வழி மறந்து
வழிந்துன்
தொப்புளை
முத்தமிட்டு
கொசுவமாய்
கதகதப்பில்
சொகுசாய்
தூங்குகிறதே...

இந்த பாக்கியம்
எனக்கு
எப்போது
கிடைக்கும்
அன்பே.....

எழுதியவர் : ஜெய் ரெட்டி (12-Jan-19, 11:48 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
Tanglish : saelai paakkiyam
பார்வை : 178
மேலே