பொங்கல் வாழ்த்து

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளில்(ன்)
கடைசி நாளான போகி பொன் நாளில்(ன்) "பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும்" என்ற பெரியோரின் வாய்மொழிக்கேற்ப
சாதி, மத, தீண்டாமைக்குத் தீ வைத்து அன்பெனும் பூவை
அணைத்தல்(தழுவுதல்) வேண்டும்.துணியையும் துடப்பத்தையும் தீ வைப்பதை விட்டு விட்டு தூக்கத்தை தூர எறிந்து துயில் கொள்ளல் வேண்டும்.மதி நிறைந்த நாளில் அறியாமையை விட்டு அனைவரிடமும் அன்பு கொள்ளல் வேண்டும்.


மார்கழி முடித்து மாதம் பிறக்கக் மங்கல தை மகள் மலரென வந்தாள்....
பொங்கல் நான் என்று புது மொழி சொன்னால்....
தீங்கின்றி திங்கள் மும்மாரி பெய்து திசை எங்கும் செழிக்கட்டும் என்றாள்...
ஓங்கு பெரும் செந்நெல் கொழிக்கட்டும் என்றாள்....வறுமை ஒழியட்டும் என்றாள்.....

எது பொங்கல்? எது பொங்கல்?
சாதி இரண்டொழிய வேறில்லை என்ற சமத்துவப் பொங்கல்.....

ஒன்றே குலம் ஒருவனே தேவன் அனைவரும் சமம் என்ற சர்க்கரைப் பொங்கல்.....

இயற்கையை நேசிக்கும் இனிய பொங்கல்......
இனிய சொற்கள் பேசும் இன்னிசை பொங்கல்....

உழைக்கும் உழவர்களை உற்சாகப்படுத்தும் உவகைப் பொங்கல்....

எப்படி வைக்க வேண்டும் பொங்கல்:

சூரியன் உதிக்கும் முன்னே சுள்ளுன்னு எந்திரிச்சு....
வண்ண வாசலிலே வகைவகையா கோலம் போட்டு....
வந்த வானவில்லும் வாய் பிளந்து நிற்குமம்மா.....வீட்டு வாசலிலே வெட்டருவா கட்டமிட....
கட்டிய அடுப்புக்கு கற்பூர தீ வச்சி....
வெட்டிய கரும்ப வேரோடு சேர்த்து வச்சி
கட்டிய கையெல்லாம் கரும்பா இனிக்கு மம்மா....

புதிய அடுப்புக்கு புதுப்பானை மேல வச்சு.....
பச்சரிசி அச்சுவெல்லம் பக்குவமா பார்த்து வச்சு....
பச்சரிசி பதமா பொங்கிவரும்......
பச்சை குழந்தை போல பாசாங்கு செஞ்சிவரும்....

பொங்கலோ பொங்கல்ன்னு வீட்டை சுற்றி வர....
மஞ்ச கிழங்க பானையிலே கட்டிவிட....
மனையில பானை வச்சு மத்தியில் மஞ்சள் வச்சு......
மஞ்சள் சூரியனுக்கு மனமார படையல்வச்சி.....
மரியாதை செலுத்தி மனமார மகிழ்வோம் .....


தை பிறந்தால் வழி பிறக்கும்....
தமிழ் என்றும் உலகில் நிலை நிற்கும்...

தமிழரின் திருநாள் தலை நிமிரும் புது நாள்.....
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்......

#தீனா

எழுதியவர் : தீனா (12-Jan-19, 10:21 am)
சேர்த்தது : தீனா
Tanglish : pongal vaazthu
பார்வை : 965
மேலே