ஜெய் ரெட்டி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெய் ரெட்டி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 506 |
புள்ளி | : 130 |
காதல் ஓவியம்.....
காதல் என்பதையே அறியாத எனக்கு காதலை உணர வைத்த என் காதல் தெய்வம் அவள்.
அவளை மட்டுமே தினமும் நினைக்க வேண்டுமென வற்புறுத்தி மடலின் முடிவில் உங்க என்றெழுதி அதற்கு பின் அவள் பெயரிட்டு காதலை எனக்கு ஊட்டி வளர்த்தாள் அவள். நானும் கூடத்தான் அதில் உருகிப் போனேன்.
வயதைப் பற்றி பேசினாலே கோவக்கார கிளியாய் மாறிப் போவாள். அவளின் பிடிவாத குணம் எனக்கு பிடித்து போனதும் ஒரு கவிதை. சிறு வயதிலும் ஆசைப் பட்ட பொம்மை கிடைக்காவிட்டால் அடங்காப் பிடாரியாவாள் அது கிடைக்கும் வரை. என்னைக் காதலிப்பதிலும் கூட அவள் பிடிவாத குணத்தை நான் உணர்ந்தேன்.
தூரத்தில் இருந்தாலும் அவள் ஆசைப் பட்டதை நான் அணிவதும
உன் கற்றை கூந்தல் மேலே
என் ஒற்றை ரோஜா...
காதல் கதை சொல்லும்
திரும்பி பாரு எனை லேசா..
ஆயிரம் மலர்கள் முன்னே
நீ தான் என் அழகு ரோஜா..
ஆதரவு தராவிட்டால் என்
மனசு கிழிந்திடும் பீஸ் பீஸா..
உன் கண்ணடி பட்டதும்
காதல் கொணடேன் பூஜா..
நீ கண்டுக்காமல் இருக்க
நானென்ன காற்றில் வந்த தூசா..
நீ சம்மதம் சொல்லி விட்டால்
கல்யாணம் பண்ணிடலாம் பேஷா...
அவள் நினைவு என்றும்
நெஞ்சில் பசுமரத்தாணி
அவள் பேச்சு இன்றும்
வற்றா சுவை நீர் கேணி
அவள் மூச்சு மணக்கும்
மலர்ந்த ரோசா வாசம்
அவள் இடையின் ஜாலம்
அசையும் அஜந்தா ஓவியம்
அவள் நடையின் பாவம்
அன்ன நடை சின்ன காவியம்
அவள் கூந்தலின் வாசம்
அந்த நக்கீரன் சொல் பேசிடும்
ஆனால்
அவள் தந்த முத்தமோ
அணிற்கடி கொய்யாப் பழம்
இதயம்.....
புரிந்து கொள்ள முடியா புதிர்
ஆயிரம் எண்ணங்களின் குதிர்
கையளவில் இருந்து கொண்டு
காலத்தை நிர்ணயிக்கும் உயிர்
கற்பனையில் வாழ் கவிஞனுக்கு
கை கொடுக்கும் தமிழாய் திமிர்
காதலில் தோற்றால் ஆடும் சதிர்
கைகூடினால் காவிரி நெற்பயிர்
வெட்டுக்கிளி ஒன்று
எனை தொட்டு கேட்கிறது
உன் பொட்டு வைத்த
பட்டு காதலி நலமா என்று...
குட்டு பட்டது போல்
குற்ற உணர்வு எனக்கு
எனை விட்டு சென்ற
சிட்டு குருவியை எப்படி
நான் மறப்பேன்..அவள்
கட்டுக்கடங்கா காதலில்
என் ஒட்டு உறவையெல்லாம்
விட்டு ஓடி வந்ததை எப்படி
நான் சொல்வேன்....
ஏய்..வெட்டுக்களியே..
காதல் எல்லாம் கட்டுக்
கதை தான் இவ்வுலகில்..
அடிபட்டு உணர்ந்தால் தான்
உனக்கும் புரியும்..அப்புறம்
சுட்டு போட்டாலும் காதல்
வராது உனக்கும்...
கண்ணா...
ஊடலில் தான்
உன்னோடு
தோற்றேன்..
காதலில் நான்
தோற்கவில்லை..
நான் ஒன்றும்
கோழையில்லை
உயிர் மாய்த்து கொள்ள..
நீயென்
கண்களில் முத்தமிடு..
கைகளை பற்று
ஆறுதலாய்.... என்
கூந்தலை கோதி
கண்ணீர் வரவழை..
பின் சாவதைப் பற்றி
நான் ஏன் யோசிக்க
போகிறேன்...
ஆவதை கவனிக்க நீ
இருக்கும் போது...
என் காதலி ஒரு
மாற்றுதிறனாளி...
எத்தனை தடவை
கேட்டிருப்பாள்
"ஏன் என்னை
காதலித்தீர்கள்"
என்று....
அத்தனைக்கும்
மொத்தமாய் என்
ஒரே பதிலிது தான்..
"நான் காதலிப்பது
உன்னையும் உன்
உள்ளத்தையுமே
தவிர உனதுடல்
அழகையல்ல.."
நீயோ கானம் பாடும்
வானம்பாடி..
போராடி நான் பெற்ற
வாயாடி..
அதில் ஊனமென்று
ஒன்றேதடி...
உன் கால்கள்
பழுது பட்டாலும்
என் காதல் ஊன்றிடும்
விழுதாய் உனக்கு..
கண்ணே நீயோ என்றும்
முழுதாய் எனக்கு...
கண்ணா...
ஊடலில் தான்
உன்னோடு
தோற்றேன்..
காதலில் நான்
தோற்கவில்லை..
நான் ஒன்றும்
கோழையில்லை
உயிர் மாய்த்து கொள்ள..
நீயென்
கண்களில் முத்தமிடு..
கைகளை பற்று
ஆறுதலாய்.... என்
கூந்தலை கோதி
கண்ணீர் வரவழை..
பின் சாவதைப் பற்றி
நான் ஏன் யோசிக்க
போகிறேன்...
ஆவதை கவனிக்க நீ
இருக்கும் போது...
நீயோ கண்ணாடியில்
உன் முகம் பார்க்கிறாய்..
நானோ உன் முகத்தினில்
என் முகம் பார்க்கிறேன்..
உன் விழியழகில் மதி மயங்கி
இதழழகில் இந்திர லோகம்
செல்கிறேன்...
முக்கனியும் ஒரு சேர திகட்டா
மேனி கண்டு மனது கொஞ்சம்
தடுமாறுகிறேன்..
கனிகளை கொய்திட
கைகள் பரபரத்தாலும் காதலால்
கட்டுப்படுகிறேன்....
உன் புன்னகை ஒன்றுக்காக
என் நிலை மறந்து உன் நினைவாய்
தவம் கிடக்கிறேன்...
படைத்தவன் பிரம்மனென்றாலும்
செதுக்கிய உன் பெற்றோரைக்
கண்டு நான் பிரமிக்கிறேன்...
மஞ்சம் துயிலும் மாலே
************************************************
வஞ்சம் வறண்டமனம் பஞ்சமா பாதகம்
அஞ்சாப் பழிபாவம் நெஞ்சினுள் அடையாது
தஞ்சமெனக் கெஞ்சுமேனைக் காத்திடுவாய் அரவமணை
மஞ்சம் துயில்கின்ற மாலே !
கயல் என்ற அடைமொழி
உன் கண்களுக்கு மட்டுமே
இதழோர மச்சம் அந்த
இந்திரன் முத்தத்தின் எச்சமே...
அலை பாயும் கருங்கூந்தல்
நிலை தாடுமாற வைக்குமே
சிலை போன்ற உன்னழகில்
சிற்பி உளியும் மயங்குமே..
முன்னழகும் பின்னழகும்
முக்கனியை விஞ்சுமே
கண்ணழகும் மூக்கழகும்
காவியம் பல படைக்குமே...
நடையழகும் உடையழகும்
நாடகம் அரங்கேற்றுமே
காலழகை கொஞ்சி கொஞ்சி
காற்கொலுசும் தவிக்குமே..
உன் விரல்
கோர்த்து
நான் நடக்க
என் விழியதை
நீர் நனைக்க
விழிநீரீல்
விடை தேடி
நீ சலிக்க
உன் தோள்
சாய்ந்து
கண்ணில் தூசி
என்றேன்
என் தலை
தூக்கி
உன் இதழ்
குவித்து
ஊதிய பின்னே
மீண்டும் உன்
தோள்சாய
கண்ணின் தூசி
காணாது போனது
தோழியே!