காற்கொலுசும் தவிக்குமே

கயல் என்ற அடைமொழி
உன் கண்களுக்கு மட்டுமே
இதழோர மச்சம் அந்த
இந்திரன் முத்தத்தின் எச்சமே...

அலை பாயும் கருங்கூந்தல்
நிலை தாடுமாற வைக்குமே
சிலை போன்ற உன்னழகில்
சிற்பி உளியும் மயங்குமே..

முன்னழகும் பின்னழகும்
முக்கனியை விஞ்சுமே
கண்ணழகும் மூக்கழகும்
காவியம் பல படைக்குமே...

நடையழகும் உடையழகும்
நாடகம் அரங்கேற்றுமே
காலழகை கொஞ்சி கொஞ்சி
காற்கொலுசும் தவிக்குமே..

எழுதியவர் : ஜெய் ரெட்டி (9-Jan-19, 2:10 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 216

மேலே