காதல்
வானில் வில்போன்றதோர் வண்ண வண்ண
கோலம் போட்டது யாரோ என்று வானவில்லை
அண்ணாந்து பார்த்து நின்ற நான் சிந்திக்க
வானவில் காணாமல் போனது ..........இப்போது
மண்ணில் மீது என் பார்வை..... கண்டதே
ஓர் வண்ண வண்ண வில் ......அதை போட்டுக்கொண்டிருந்தாள்
மண்ணில் பாவை ஒருத்தி கோலத்திருவிழாவில் போட்டிக்கு '
வானவில்லை மண்ணில் கொணர்ந்தவள் என் மனதை
திருடிவிட்டாள்........ அவள் அறிவாளோ தெரியாது
அவள் என் மனதில் தங்கிவிட்டாள் அவள் வரைந்த
அந்த வண்ண வான வில் கோலத்துடன்
போட்டிக்கு வந்த கோலத்தை தேர்ந்தெடுக்க
வந்த நீதிபதி நான் , அந்த கோலத்தை தேர்ந்தெடுத்தேன்
அவளை மனதில் தேர்ந்தெடுத்த நான் எப்படி
என் மனதை அவளிடம் சொல்வேன்....