கண்களில் முத்தமிடு

கண்ணா...
ஊடலில் தான்
உன்னோடு
தோற்றேன்..
காதலில் நான்
தோற்கவில்லை..
நான் ஒன்றும்
கோழையில்லை
உயிர் மாய்த்து கொள்ள..

நீயென்
கண்களில் முத்தமிடு..
கைகளை பற்று
ஆறுதலாய்.... என்
கூந்தலை கோதி
கண்ணீர் வரவழை..

பின் சாவதைப் பற்றி
நான் ஏன் யோசிக்க
போகிறேன்...
ஆவதை கவனிக்க நீ
இருக்கும் போது...

எழுதியவர் : ஜெய் ரெட்டி (11-Feb-19, 11:31 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
Tanglish : kankalail muthamidu
பார்வை : 649

மேலே