காதல் வராது உனக்கும்

வெட்டுக்கிளி ஒன்று
எனை தொட்டு கேட்கிறது
உன் பொட்டு வைத்த
பட்டு காதலி நலமா என்று...
குட்டு பட்டது போல்
குற்ற உணர்வு எனக்கு
எனை விட்டு சென்ற
சிட்டு குருவியை எப்படி
நான் மறப்பேன்..அவள்
கட்டுக்கடங்கா காதலில்
என் ஒட்டு உறவையெல்லாம்
விட்டு ஓடி வந்ததை எப்படி
நான் சொல்வேன்....

ஏய்..வெட்டுக்களியே..
காதல் எல்லாம் கட்டுக்
கதை தான் இவ்வுலகில்..
அடிபட்டு உணர்ந்தால் தான்
உனக்கும் புரியும்..அப்புறம்
சுட்டு போட்டாலும் காதல்
வராது உனக்கும்...

எழுதியவர் : ஜெய் ரெட்டி (22-Mar-19, 8:13 am)
பார்வை : 113

மேலே