வான் ஈர்ப்பு மழை
தனித்திருந்த காலங்களில்
புரிந்தும்... புரியாத பார்வைகளில்
காத்திருக்கச் சொன்னாய்
உன் விழி மொழிகள் மூலம்
கண்மூடி கண்திறப்பதற்கு முன்
காலங்கள் கரைந்தது
கனவுகளும் சேர்ந்து
அதே காத்திருப்பில் நான்
கடந்து செல்கின்றாய்..
பார்த்தும்.... பாராமுகமாய்..
புரிந்த பார்வைகள்
புரியாத காத்திருப்புக்கள்...
கரங்களுக்கொருவர் திமிரிடிட
தீராத கண்ணீருடன்
தீண்டாத பார்வையுடன்
தீ மிதித்தவள் போல்...
உன் கண்ணீர் தேசத்தினை காணும்போது
என் வசந்த காலங்கள் முடிவுற்றிருந்தது..
உன் வாழ்வில் வசந்தம்
குடியிருக்கும் என்று
உன் நிர்மூலமான கண்ணீர்த் திவலைகள்
கன நீராய் கனக்கின்றது
மன ஊன் உலையில்...