காதலே நீ வாழ்க

காதல்,காதல்....🌹💔

காதல் இயற்கை
கொடுத்த பரிசு!
காதல் இயற்கை
அளித்த வரம்!
காதல் இனிமையான
ஏழு ஸ்வரம்!
காதல் மானுடத்தின்
சுகானபவம் !
காதல் இரு மனங்களின்
ஆழ்மன ஆணந்த வெளிபாடு!
காதல் வெண்மை விட தூய்மையானது!
காதல் காந்தியை விட எளிமையானது!
காதல் கனவில் மட்டும்
குபேரனை விட ஆடம்பரமானது!
காதல் கண்களில் ஆரம்பிக்கிறது !
காதல் இதயங்களில் ஆழமாக
நுழைகிறது!
காதல் இரு உயிர்களை உலுக்குகிறது!
காதல், காதல் செய்ய எப்போதும் துடிக்கிறது!
காதல் என்றும் பிரிவை எண்ணியது இல்லை!
காதல் அன்பின் வழி வந்ததால் உண்மையானது!
காதல் பண்பின் வழி வந்ததால் பவித்தரமானது!
காதல் எல்லோருக்கும் வருவதால் சமத்துவமானது!
காதல் சாதி என்ற சாயம் பூசாது!
காதல் மதம் என்ற மகுடம் சூடாது!
காதல் கரண்சிக்கு அடிபணியாது!
காதல் என்றும் தோற்றதில்லை!
காதல் மனித உயிர்களின் உரிமை !
காதல் மானுடத்தின் மகோன்னதம்!
காதல் இல்லையேல்
இவ்உலகம் இல்லையே!
காதல் செய்க!
காதல் வாழ்க!
- பாலு.

எழுதியவர் : பாலு (22-Mar-19, 9:28 am)
பார்வை : 114

மேலே