அவள் நினைவு என்றும்

அவள் நினைவு என்றும்
நெஞ்சில் பசுமரத்தாணி
அவள் பேச்சு இன்றும்
வற்றா சுவை நீர் கேணி
அவள் மூச்சு மணக்கும்
மலர்ந்த ரோசா வாசம்

அவள் இடையின் ஜாலம்
அசையும் அஜந்தா ஓவியம்
அவள் நடையின் பாவம்
அன்ன நடை சின்ன காவியம்
அவள் கூந்தலின் வாசம்
அந்த நக்கீரன் சொல் பேசிடும்

ஆனால்
அவள் தந்த முத்தமோ
அணிற்கடி கொய்யாப் பழம்

எழுதியவர் : ஜெய் ரெட்டி (20-Apr-19, 7:42 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
Tanglish : aval ninaivu endrum
பார்வை : 569

மேலே