நன்றி கர்த்தரே நன்றி

நன்றி சொல்வேன் நானிதோ கர்த்தரே
ஒன்றாய் இருக்கக் கொடுத்த குடும்பம்
நன்றே செய்த நண்பர்கள் தமக்காய்
வென்றே வாழக் கிடைத்தவைக் காக……(நன்றி)

நன்றியைக் காட்டிய நாட்களுக் காக
நல்லன செய்ய முடிந்தமைக் காக
நாட்டினுக் குதவும் நினைப்பினுக் காக
நல்லவர் கூட்டில் மகிழ்ந்ததற் காக
என்றுமே என்னோ டிருந்ததற் காக…. (நன்றி)

கன்றிய மனத்தால் ஒன்றா தவர்முன்
நின்றே நிலைக்க நிறுத்திய தற்காய்
வென்றவர் முன்னே வாழ்ந்து காட்டியே
என்றும் வெறுக்கா திருந்தமைக் காக
ஒன்ற்$இ எனக்குள் உணர்த்திய வைக்கே…(நன்றி)

நல்ல பராமரிப்பை நாளும் தந்தீர்
=நன்றி கர்த்தரே நன்றி;
சொல்லி மகிழும் சுகங்களைத் தந்தீர்
=நன்றி கர்த்தரே நன்றி!
எல்லாப் பொழுதும் எம்மைக் காத்தீர்
=நன்றி கர்த்தரே நன்றி!
===== =======

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியேல் (12-Jan-19, 5:38 pm)
பார்வை : 101

மேலே