இருளும் ஒளியுமாய்

நானே கடவுள்
உலகை காக்கும்

உலக ரட்சகன்
என பிதற்ற

இவரை சுற்றி
துதிபாடும்

சுயநலக் கூட்டம்

பிரச்சனைக்கு
பயந்து

ஓடி ஒளியும்
வாய்சொல் வீரம்

அடுத்தவன்
பிரச்சனையில்

குளிர்காயும்
பொதுநலப் போர்வை

இருளை விரட்டும்
ஒளியாய்

இவர்களின் உருவகம்

கட்டியவளை காட்டில்
விட்ட கயவர்கள்

உத்தமனாய் வேடமிட்டு

உலாவரும் உத்தம
புத்திரர்கள்

இப்படியும் ஒருசிலர்
நம்மோடு

இருளும் ஒளியும்போல!..,

எழுதியவர் : நா.சேகர் (12-Jan-19, 11:41 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 120

மேலே