வீரமும் விளையாடும்

இளம் கன்னியை மணக்க
இளவட்ட கல்லைத் தூங்குவான்
ஆற்று மணல் ஆர்ப்பரிக்க
ஆடவரின் சடுகுடு அரங்கேறும்
அம்பிகையை மணக்க
அம்பினை எய்துவான்
காளை பருவம் வந்ததால்
காளையை அடக்க வந்தான்
துடுக்கெடுத்து திடுக்காய்
துடுக்காண்டம் ஆடுவான்
பிள்ளை, பாலனாக மாறி
பாலன், சிறுவனாய் வளர்ந்து
சிறுவன், பையனாக உருவெடுத்து
காளையன் தலைவனாயும்
முதியோனாயும் மாறினாலும்
கிழவனாய் மடிந்தாலும்
அவனின் வீரமும்
விளையாடும் என்றும் மடியாது.

- கீர்த்தனா, SKASC, கோவை.

எழுதியவர் : கீர்த்தனா, SKASC, கோவை (12-Jan-19, 9:00 pm)
சேர்த்தது : Maheash kumaar
பார்வை : 9427

மேலே