தனிமை

" இனிது இனிது ஏகாந்தம் இனிது ",என்று சொன்ன ஔவையின் வாக்கு பொய்த்ததோ?
தனிமையின் கொடுமையால் தற்கொலை என்று தலைப்பு செய்தியும் வந்து தகராறு செய்கிறதே!

மனிதர்களும் அவ்வளவு பலவீனமானவர்களா?
தனிமை வெறுமைதான்.
வெறுமை உணராவிடில் உண்மை எங்கே புரியும்?
கூடி வாழும் மனிதக் கூட்டத்தில் தனிமை கொடுமை என்றால் என்றோ நான் மரித்திருக்க வேண்டுமே!

பொழுதுபோக்கு கூடலில் நேரம் போகவில்லை என்று பழகும் மனிதர்களைவிட தனிமை கொடுமையானது அல்ல.
நேரத்திற்கு நேரம் மாறுவார்கள் இவர்கள்.
தனிமையோ எப்போதும் அடைக்கலம் தரும் தியானக்கூடம்.

தனிமையை சுவைக்க தனிமையோடு சற்று உரையாடல் வேண்டும்.
எனது தனிமை இயற்கையோடு எனக்குள்ள தொடர்பை மேம்படுத்தவே உதவியாக உள்ளதென்பேன்.
தனிமை கொடுமையெனில் அது உங்கள் பலவீனம்.
வைராக்கியமின்மையின் அடையாளம்.

தேவையற்ற வார்த்தைகளால் பிறர் மனம் புண்பட பேசி இன்பம் காண்பதை விட இனிமையானது இந்த தனிமை.
நம்மை நாமே தயார் செய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு இந்த தனிமை.
தனிமை உணராவிடில் வாழ்வதும் கடினம்.
எல்லா சூழ்நிலைகளிலும் எல்லாரும் நம்முடன் இருக்க மாட்டார்கள்.
ஆதலால் பழகிச் சொல்கிறேன் தனிமை போல் இனிமை வேறெதிலும் இல்லை.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Jan-19, 4:18 pm)
Tanglish : thanimai
பார்வை : 6103

மேலே