அப்துல்கலாம் அவர்களே..!
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
*சமுதாயக் கவிதை*
*கவிஞர் கவிதை ரசிகன்*
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
கோடி கோடியாய்
பணத்தை பார்க்க வேண்டும்
பெட்டி பெட்டியாக
தங்கத்தை பார்க்க வேண்டும்
அடுக்கடுக்காக
வீட்டை பார்க்க வேண்டும்
படிப்படியாக
பதவி உயர்வு பார்க்க வேண்டும்
வரிசை வரிசையாக
கார்களை பார்க்க வேண்டும்
என்றெல்லாம்
ஆசைப்படும்
விஐபிகளுக்கு இடையில்
அப்துல் கலாம் அவர்களே!
நீங்கள் மட்டும்தான்
லட்சம் லட்சமாக குழந்தைகளை
பார்க்கவேண்டும் என்ற
ஆசைப்பட்டீர்கள்....!
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
இன்று
உயர்பதவி கிடைத்தவுடன்
வீட்டை உயர்த்த
நினைக்கும்
அரசியல்வாதிகளுக்கு மத்தியில்
அப்துல் கலாம் அவர்களே!
நீங்கள் மட்டும்தான்
உயர்த்த நினைத்தீர்கள்
நாட்டை.....!
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
அப்துல் கலாம் அவர்களே
நீங்கள்
முதன்முதலாக
அனுப்பிய ஏவுகணை
பாதி வானத்தோடு
திரும்பி வந்ததைப் பார்த்த
எல்லாரும்
தோல்வி என்று சொன்னார்கள்...
ஆனால்
எனக்கென்னவோ
அது
உங்களை விட்டு
பிரிய முடியாமல் தான்
திரும்பி வந்திருக்கும் என்று
நினைக்கத் தோன்றுகிறது....
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
இதுநாள்வரை
குடியரசுத் தலைவர் பதவியால் தான்
எல்லாருக்கும்
பெருமை கிடைத்தது...
ஆனால்
குடியரசுத் தலைவர் பதவிக்கு
பெருமை கிடைத்தது
அப்துல் கலாம் அவர்களால்தான்....
கவிதை ரசிகன்
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪