முள்ளும் நல்லதும்

ஈச்ச மரத்தின் இலை எல்லாம் முள்ளு
பனை மரத்தின் ஓலையும் முள்ளு
எலும்மிச்சை மரத்திலும் ஏகப்பட்ட முள்ளு
கொடுக்காப்புளி மரத்தில் கொத்தாய் முள்ளு

சுண்டை செடியில் கூர்மையான முள்ளு
வெண்டை செடியில் மென்மையான முள்ளு
கத்தரி செடியில் கட்டையான முள்ளு
கள்ளிச் சப்பாத்தியில் கடுமையான முள்ளு

தூதுவளைக் கொடியில் அருவால் முள்ளு
நெருஞ்சி கொடியில் நிறைந்திருக்கும் முள்ளு
முசு முசுக்கைக் கொடியில் பொசு பொசுவென முள்ளு
சிறு வள்ளிக் கொடியில் சிறுகத்தி முள்ளு

முள் சீதா காயில் முழுவதும் முள்ளு
பலாகாயில் படிபடியாய் முள்ளு
அன்னாசி காயில் தூசிப் போன்ற முள்ளு
பீர்க்கங்காயில் கத்திப் போன்ற முள்ளு

முள்ளுள்ளதில் எல்லாம் ஏதோ மர்மம் உண்டு
முழுவதும் அறிந்துக் கொண்டால் பெரும் பலம் உண்டு
அறியாமல் உண்டு வந்தாலும் அற்புதமும் உண்டு
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (2-Dec-19, 7:41 pm)
பார்வை : 128

மேலே