காதல் வலி

பிரம்மன் எழுதிய
மிகச் சிறந்த கவிதையின்
சான்று உன் இதழ்
நீ ஏன் சான்றிதழ்
பெறுகிறாய் கவியெழுதி

கடல் தரும் முத்தினும்
மதிப்பு மிக்கது
உன் உடல் தரும் முத்து

நீ சிரிப்பதால்
நிறைவது சில்லறை மட்டுமல்ல
கல்லறையும்தான்

மதி பெண்ணே
உன்னை கணக்கு
செய்வோரால் குறைகிறது
அவரது மதிப்பெண்ணே
அவரையும் கொஞ்சம்
ஏறெடுத்து மதி பெண்ணே

உன்னைப் பார்த்துக்கொண்டே
குடிசையில் கஞ்சிதான்
குடிக்கிறேன்
குடித்தும் கஞ்சா
அடித்ததுபோல் உள்ளது

உன்
வீதியில் தெருவிளக்கு
இல்லை
வீட்டில் திருவிளக்கு இல்லை
உன் உருவிளக்கு இருப்பதால்

சீதைக்கு ராமன் இருக்கும் இடம் அய்யோத்தி
நீ இருக்கும் இடம் ஓரக்கண்ணால்
பார்த்தேன் அய்யோ தீ

நீ பூச்சூடிய முல்லைக்காரி
சூரியனுக்கே சிவப்பை
அள்ளி வழங்கிய வெள்ளைக்காரி
உன் முகத்தை என் நெஞ்சில்
பதித்த வில்லைக்காரி

என் மனதை அள்ளி எடுத்த கொள்ளைக்காரி
கனவிலும் காதல் செய்யும்
தொல்லைக்காரி
என் ஊரின் எல்லைக்காரி

நடையா நடனமா
என தெரியாது குழப்பும்
தில்லைக்காரி

உன் மனம் கொடுத்து
என்னை மணம் முடித்து
எப்போது ஆகப்போகிறாய்
பிள்ளைக்காரி

எழுதியவர் : குமார் (12-Jan-19, 6:16 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : kaadhal vali
பார்வை : 207
மேலே