எங்கிருந்தோ நான்
அவளுக்கு
தயாரானது மேடை
எனக்கோ பாடை
அவள் மணவறையில்
நானோ பிணவறையில்
மலர்கள்
இருவர் மீதும்
விழுந்தன
மாலை
இருவர் கழுத்திலும்
மேளம்
இருவருக்கும் முழங்கியது
கூட்டம்
இருவருக்கும் கூடியது
ஊர்வலம்
இருவருக்கும்
நடனம்
இருவர் முன்பும்
ஆடினார்கள்
அவள் முன்
தீப்பொறி தூண்டினார்கள்
என் முன்
பொறியை தூவினார்கள்
அவளுக்கு மகுடம்
ஏறியது
என் மண்குடம்
ஊறியது
கூறையோடு அவள்
தாரை யோடு நான்
அவள் காலில் மெட்டி
ஏறியது
என் தோளில் வரட்டி
ஏறியது
அவள் விளக்கு ஏற்றினால்
என்னையே விளக்காக ஏற்றினார்கள்
அவளின் அறையில்
மின் விளக்குகள் எரியவில்லை
நான் எரிந்து கொண்டு இருந்தேன்
அவளின் கையில் பால்
என் மெய்யில் பால்
அவள் சாம்பல் உண்டால்
நான் சாம்பலானேன்
கணவனோடு அவள்
கனவுகளோடு நான்