என் இதயம் வெடித்து சிதறும் நாள்வரை 555
உயிரே...
பூவின் மொட்டுக்குள் இருக்கும்
தேன்துளி போல...
என் இதய கூட்டுக்குள்
எப்போதும் தித்திப்பாய் இருப்பாயடி...
நீயும் நானும்
சேர்வது ஊரார்க்கும்...
நம் உறவினருக்கும்
பிடிக்கவில்லை...
மனதாலும் உடலாலும் சேர்ந்து
வாழ்ந்தால்தான் வாழ்க்கையா...
மனதால் நினைத்து
வாழ்ந்தாலே வாழ்க்கைதான்...
உன் நினைப்பும்
எனக்கு சுகம்தான்...
உனக்கு விருப்பமென்றால்
வேறுமணம் முடித்துக்கொள்...
உன் நினைவுகளை மட்டும்
என்னிடமிருந்து...
சீதனமாக நீ
கேட்டுவிடாதே...
என் இதயம் வெடித்து
சிதறும் நாள்வரை...
உன் நினைவுகளுடன்
நான் வாழ்வேனேடி.....