எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உரையாடல்கள் பலவற்றின் பாலமாய் அமைந்த தொலைபேசிக்குத் தெரியும் நட்பெனும்...

உரையாடல்கள் பலவற்றின்
பாலமாய் அமைந்த 
தொலைபேசிக்குத் தெரியும் 
 நட்பெனும் பொன்னுறவில்
வரமாக அமைந்திடுவோர்
தொலைநோக்கி கொண்டாலும்
தென்படுவதரிதென்று 
விதைகளாய் சந்தித்து
விருட்சமாய் வளர்கையில்
நிழலாய்
மலராய்
கனியாய்ப் புலர்ந்து
அகமதில் ஒளிரும்
பேரன்பில் தான்
எத்தனை இன்பம்
எத்தனை இனிமை 
அரிதான உறவுகளில் மட்டுமே
தொலைபேசியில் பரிமாறிய
மௌனங்களைக் கூட
மொழிபெயர்க்க இயலும்...

பதிவு : மதுமதி H
நாள் : 25-Sep-18, 4:32 pm

மேலே