தான்ய ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தான்ய ஸ்ரீ |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Mar-2020 |
பார்த்தவர்கள் | : 1122 |
புள்ளி | : 70 |
வயிற்றை கிழிக்க காத்திருந்த
கத்திகளுக்கு வேலை வைக்காமல்
முட்டி மோதி
எட்டி உதைத்து
வெளிவந்த என் மகவே !
ஏன் இந்த அழுகை
காற்று புகா கருவறைக்குள்ளே
இத்தனை போராட்டம் என்றால் -இனி
இந்த உலகில் எத்தனையோ !
என்று எண்ணி எண்ணி அழுகிறாயோ..-இல்லை
என்னை பிரிந்த சோகமா..
இன்னும் ஆயிரம் ஆயிரம் கதை சொல்லலாம் இந்த அழுகைக்கு..
ஆனாலும்
இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்.. .
பத்துமாதம் சுமந்து பத்திரமாய் நீ வந்ததும்
பத்துவிரல் சேர்த்து பக்குவமாய் உனை வாங்கி
பார்க்கும்போது நானும் பிறவி பயன்
அடைஞ்சேனே
வெயிலோடு மழை போல்
என் சிரிப்போடு கண்ணீர் கண்டேன்...
தாயென்ற பட்டம் தந்தாயே -என்
பெண்மையை முழுமை
அவள் கண்ணுக்கு 👀
இமையாய் நானிருந்தேன்..
அதனால்தான் என்னவோ !
அவள் கண்ணுக்கு -நான். தெரியாமலே போய்விட்டேன்... 🗿
அன்பே !!!!
நீ என்ன அனுமின் நிலையமா?
அனல்மின் நிலையமா?
உன்னைகாணும் போதெல்லாம்
எனக்குள் காதல் மின்சாரம்... 💓
பசி 👳♂️
பசி தீ மூட்டிய நெருப்பில்
பற்றி எரிகிறது
----வயிறு
கட்டழகு பெண்ணொருத்தி
இட்டு விட்டு போன கட்டளைகள் முன்னிறுத்தி....
கட்டவிழ்த்த காளையென கண்டபடி
சுற்றிரிந்தேன் ---இன்றோ
மொட்டவிழ்த்த மலரென மெல்ல மெல்ல மலருறேனே...... 🌷
கண்கள் பட்டு விடாதோ....
நெஞ்சம் கெட்டு விடாதோ...
எட்டா கனியென விட்டுவிட போவதில்லை.....
தொட்டு விடும் தூரம் தானே....
மனம் விட்டுவிட தோணவில்லை....
தறிகெட்டு திரியுற மனசு -அட
விம்மிகிட்டு கிடக்கு தினமும்.. .
காதலை சொல்லிப்புட்டு போயேண்டி....
குத்தாட்டம் போடும் வயசு....
கும்மாளம் போடும் மனசு....
இடம் மாறுது மனசு....
தடுமாறுது வயசு... .
எனக்கானவள் நீ தான்....
உனக்கானவன் நான் தான்....
மனநிலை என்பது வானிலை போல......
நிலையான சூழ்நிலை ஏதுமில்லை....
இன்று என்பது நிலையில்லை...
நாளை என்பது நிஜமில்லை.....
கேளடி என் கண்மணி.....
காகிதப்பூவாய் மனம் காத்துலஆடுது.....
கொஞ்சம் கூச்சலும் போடுது......
வாழ்க்கை என்பது கானல் நீரோ........
தெரு முழுவதும் ஓவியம்
என்னவளின் பாதச்சுவடுகள்
.......மேகங்கள்....
மண்ணில் பசுமை புரட்சி ஏற்பட
விண்ணில் போர் நடத்தும்
புரட்சிக்காரர்கள்
மேகங்கள்....
போர் முரசு -இடி முழக்கம்
உயிர் கொடுக்கும் படைவீரர்கள் - மழைத்துளிகள்..
நன்றன்று பிரித்து எழதுக
நீ ஒரு விமானம் என்றால், நான் அதன் அடிதளமாக இருக்க விரும்புகிறேன்! நீ நெருப்பாக இருந்தால், நான் அதன் மெழுகுவர்த்தியாக இருக்க விரும்புகிறேன்! நீ என் வாழ்க்கையாக இருந்தால், நான் உன் உயிராக இருப்பேன்.💙
கவிதை, கதைகளை எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்