உனக்காக 💐

கட்டழகு பெண்ணொருத்தி
இட்டு விட்டு போன கட்டளைகள் முன்னிறுத்தி....
கட்டவிழ்த்த காளையென கண்டபடி
சுற்றிரிந்தேன் ---இன்றோ
மொட்டவிழ்த்த மலரென மெல்ல மெல்ல மலருறேனே...... 🌷

கண்கள் பட்டு விடாதோ....
நெஞ்சம் கெட்டு விடாதோ...

எட்டா கனியென விட்டுவிட போவதில்லை.....
தொட்டு விடும் தூரம் தானே....
மனம் விட்டுவிட தோணவில்லை....

தறிகெட்டு திரியுற மனசு -அட
விம்மிகிட்டு கிடக்கு தினமும்.. .

காதலை சொல்லிப்புட்டு போயேண்டி....
குத்தாட்டம் போடும் வயசு....
கும்மாளம் போடும் மனசு....
இடம் மாறுது மனசு....
தடுமாறுது வயசு... .
எனக்கானவள் நீ தான்....
உனக்கானவன் நான் தான்....
நமக்கானது காதல் தான்.......

எழுதியவர் : Karikayal (25-Mar-20, 1:38 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
பார்வை : 654

மேலே