நிலவும் அவளும்

பௌர்ணமி இரவு என் வீட்டு
மேல் மாடத்தில் நானும் அவளும்
பவனி வந்த வெண்ணிலா
இவள் முகத்தில் தன்னை
அழகு பார்த்தது ..... அதில்
தன் முகத்தில் மட்டும் கொஞ்சம்
மாசு கலந்திருப்பது கண்டு
வெட்கி தலைகுனிந்து அங்கிருந்து
காணாமல் எங்கோ போனது
வெண் முகிலின் பின்னே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Mar-20, 1:35 pm)
Tanglish : nilavum avalum
பார்வை : 266

மேலே