என் குலமகள் 🌹

வயிற்றை கிழிக்க காத்திருந்த
கத்திகளுக்கு வேலை வைக்காமல்
முட்டி மோதி
எட்டி உதைத்து
வெளிவந்த என் மகவே !
ஏன் இந்த அழுகை
காற்று புகா கருவறைக்குள்ளே
இத்தனை போராட்டம் என்றால் -இனி
இந்த உலகில் எத்தனையோ !
என்று எண்ணி எண்ணி அழுகிறாயோ..-இல்லை
என்னை பிரிந்த சோகமா..
இன்னும் ஆயிரம் ஆயிரம் கதை சொல்லலாம் இந்த அழுகைக்கு..
ஆனாலும்
இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்.. .

பத்துமாதம் சுமந்து பத்திரமாய் நீ வந்ததும்
பத்துவிரல் சேர்த்து பக்குவமாய் உனை வாங்கி
பார்க்கும்போது நானும் பிறவி பயன்
அடைஞ்சேனே
வெயிலோடு மழை போல்
என் சிரிப்போடு கண்ணீர் கண்டேன்...
தாயென்ற பட்டம் தந்தாயே -என்
பெண்மையை முழுமையாக்கினாயே !
என்னையே எனக்கு புதிதாய் அறிமுகபடுத்தினாய்.
நீ யார்
தேவதை தந்த வரம் அல்ல
வரமாய் வந்த தேவதை
நான் கொஞ்சும் என் மகள்..

எழுதியவர் : Karikayal (15-Apr-20, 1:00 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : en poomagale
பார்வை : 5053

சிறந்த கவிதைகள்

மேலே