மு ஏழுமலை - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மு ஏழுமலை
இடம்:  திருக்கோவிலூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2019
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  32

என்னைப் பற்றி...

ஆங்கில ஆசிரியர். தற்போது துணை முதல்வராக ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிகிறேன்.. தமிழறி தமிழனே என்ற கவிதை நூல் வெளியிட்டு உள்ளேன் (2014 கவிதை எழுதுவதில் மிக ஆர்வம்.

என் படைப்புகள்
மு ஏழுமலை செய்திகள்
மு ஏழுமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2019 4:37 pm

இமயம் ஏறலாம் !


எழுந்து வா எழுந்து வா
துணிந்து வா
மாற்றங்கள் நாம் செய்யலாம்!

பணிந்து வா பணிந்து வா
புரிந்து கொள்
ஏற்றங்கள் நாம் கொள்ளலாம் !

அறிந்து வா அறிந்து வா
தெரிந்து கொள்
ஆக்கங்கள் நாம் செய்யலாம் !

நிமிர்ந்து நில் நிமிர்ந்து நில்
துணிந்து செய்
வெற்றிதனை நாம் காணலாம் !

கனவு காண் கனவு காண்
முயற்சி செய் - நிச்சயம்
ஓர் நாள் வெல்லலாம் !

முயற்சி செய் முயற்சி செய்
பயிற்சி கொள்
இமயம்கூட நீ ஏறலாம்!

இவன் மு. ஏழுமலை
9789913933

மேலும்

மு ஏழுமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2019 4:33 pm

காசு வேண்டுமோ?

கடவுளை வணங்க காசு வேண்டுமோ
ஆராதிக்கவும் வேலையாள் வேண்டுமோ
எல்லாம் செய்வார் கடவுள் என்றால்
ஏனடா இங்கே
இத்துனை கலவரம்
எட்டி நின்று வேடிக்கையேனோ
இது கடவுளின் நீதிதானோ ?

நெருப்பு சட்டி தூக்கும் கையாலே
மனிதனை வெட்டி சாய்க்கின்றாய்
கற்பூரம் ஏத்தி பூசை செய்து
கொலை கத்தியும் தூக்குகிறாய்

பிறர் வாழ வேண்டுவது போல்
வாழ்வை கெடுக்கின்றாய்
அன்பு கொடு சக்தி என்று சொல்லி
ஏனோ வம்பும் செய்கின்றாய்
மனிதனை மனிதனாய் நினைப்பதைவிட்டு
கல்லையேனோ கடவுளாய் காண்கின்றாய்
காசை விரையம் செய்கின்றாய்
நேசக்கரம் நீட்ட மறந்து - சாமி
கோசம் போடுகின்றாய்
வேஷம் களையும் ஒருநாள்

மேலும்

மு ஏழுமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2019 4:29 pm

கர்ம வீரர் காமராசர்


கர்ம வீரரு தர்ம சீலரு
காமராசரு - நம்ம காமராசரு
கல்விக்கண்ண திறந்தாரு
மதிய உணவு தந்தாரு
ஏழைகள் சிரிக்கவே
இறைவனாய் வந்தாரு - காமராசரு
நம்ம காமராசரு

கதரு மேல ஆச வச்சாரு - மக்க
கஷ்டத்தையெல்லாம் போக்கிவந்தாரு
நெறைய அணைகளெல்லாம் கட்டிவச்சாரு
அவரு அன்பால மக்கள ஆண்டாரு

படிக்காத மேதை அவரு - பிறர்
படிக்கவேண்டி பல திட்டம் தந்தாரு
விவசாயத்த காக்கவேணும்னு அப்பவே
வெவரமாத்தான் சொல்லி வச்சாரு
கிங் மேக்கரு கிங் மேக்கரு
காமராசரு - கருத்த காமராசரு
இவன்
மு. ஏழுமலை 9789913933

மேலும்

மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2019 9:47 am

மாறுவேடம்

கண்கள் கதைக்கும்
வார்த்தைகளெல்லாம்
காதல் என்றெண்ணி
பித்து பிடித்து போகின்றனர்
ஆண்களெல்லாம் - சில போலி
சீதைகளை சிறையெடுக்க
மாயமானாய் மாறுகின்றனர்.
மு. ஏழுமலை

மேலும்

கோடான கோடி நன்றிகள் திரு. இளவல் மற்றும் நன்னாடன் அவர்களுக்கு என் கவி படித்து என்னை ஊக்கப்படுத்தியமைக்கு 30-Apr-2019 4:24 pm
arumai 30-Apr-2019 3:33 pm
உண்மை அருமை 30-Apr-2019 10:57 am
மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2019 10:21 am

நல்லாசி வேண்டுகிறேன்

அழுகையை நான் அறிந்ததில்லை
அன்னையவள் அருகில் இருந்தவரை
அன்னையவள் மறைந்ததால்
அழுது புலம்புகிறேன் - என்
கண்களில் கண்ணீர் காயும்வரை
எனக்கு ஏனிந்த குறை
நான் பள்ளி கொண்டது - என்
தாயின் பாசக் கருவறை - அதுவே
என் கல்வியறிவின் பள்ளியறை !

முந்நூறு நாட்கள் சுமந்தாள்
முத்தாய் என்னை ஈன்றெடுத்தாள்
முகம்கோணாமல் வளர்த்தாள்
முத்தமிழில் பாட்டெடுத்து
பசிக்கொண்ட இந்த பாலகனுக்கு
பாலூட்டி சீராட்டி வளர்ந்தவள்
தாயவள் உதிரத்தை பாலாக்கி
சேயெனக்கு உணவாக அளித்தவள்
விழித்திருந்து வேலிபோட்டு என்னை காத்திட்டவள்
அவள் விழித்திரையில் என்னை வைத்து
பொத்தி பொத்தி பார்த்த

மேலும்

நன்றி திரு நன்னாடன் அவர்களுக்கு கருத்தினை வழிமொழிந்தமைக்காக . 30-Apr-2019 4:22 pm
நீளமான தாயின் புகழ் பாட்டு. அருமை 30-Apr-2019 10:56 am
மு ஏழுமலை - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2019 10:27 am

அம்மா

உயிரின் ஆதியானவள்
உண்மையின் உருவானவள்
பெண்மைக்குள் ஆண்மை கொண்டு
பெரும் சக்தி கொண்டவள்

அன்பின் அருவியவள்
பண்பின் பாசறை அவள்
தண்ணீரிலிருந்து பாலை பிரிக்கும்
அன்னம் தான்
குருதியினை பாலாக்கும்
சக்தி அம்மா தான்
ஆண்டவனின்றிக் கூட
அணுக்கள் அசையும்
அம்மாவின்றி அவனியில்
எதுதான் அசையும்.

மேலும்

மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2019 4:14 pm

33. அவள் நினைவில்

ஒத்தவார்த்தை சொல்லிப்புட்டா
உசுருக்குள்ள நின்னுபுட்டா
கண்ணால பேசிப்புட்டா - என்ன
கார்மேகத்துல பறக்கவிட்டா
பட்டாம்பூச்சி பறக்குது
என் நெஞ்சுக்குள்ள - பாவி மனம்
மறந்துடுமோ அவ சொன்ன சொல்ல

ஆசைகள் அலைமோதுது
மெல்ல மெல்ல - என்மீசைக்கும்
மோகம் வருது - மேனி
வருட மெல்ல மெல்ல

கூர்விழியால் கார்குழலால்
தேகம் தீண்ட - மேகம்
உடைக்கும் மழையாய்
காதல் தீண்ட
கடல்சூழியில் மூழ்கி
நான் கரைசேர்கிறேன்
கன்னியின் நினைவினிலே
நான் மறித்து எழுகிறேன் .
மு. ஏழுமலை

மேலும்

என் கவிதைக்குழந்தைகளை கண்களால் தாலாட்டி கருத்தினில் உரமேற்றி ரசித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் இதயகனிந்த நன்றிகள் ஆயிரம் ஆயிரம் 30-Apr-2019 9:44 am
அருமை அருமை 30-Mar-2019 3:50 pm
மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2019 3:14 pm

மழையே மலர்க

ஏர் பூட்டி காத்திருக்கான் விவசாயி
எங்கத்தான் போனாயோ மகமாயி
காத்திருக்கோம் நாங்களெல்லாம்
உன்னை பாக்க - கதிரடிச்சி
சோறு வடிச்சி மக்க வயிறு ருசிக்க
வான்விட்டு வருவாயோ - மக்க
உசுரு வாழ்விக்க - வாய் பிளந்து
காத்திருக்கு மண்ணெல்லாம்
வந்திறங்கி தருவாயோ பொன்னெல்லாம்
உலகுக்கு உணவளிக்க உழவனிருக்கான்
உழவனுக்கு தோள்கொடுக்க யாரிருக்கா?
உழுது மீந்தது ஏதுமில்லை - உறவா
நீயில்லன்னா இங்கே உசுரு இல்ல .
மழை வேண்டி,
மு. ஏழுமலை

மேலும்

தோழமை யுவதா அவர்களுக்கு மு. ஏழுமலை இன் கனிவான வணக்கங்கள் மற்றும் நன்றிகள் 25-Apr-2019 2:43 pm
அருமை தோழரே 16-Apr-2019 10:13 am
மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2019 4:25 pm

35. தேர்தல் திருவிழா. . . 

தேர்தல் திருவிழா  - இது 
ஜனநாயக பெருவிழா 
ஒருவிரல் புரட்சி - நமக்கு
வேண்டும் மறுமலர்ச்சி 
ஏழைகளெல்லாம் இறைவனாய் தெரிவார்கள் 
கைகூப்பி கும்பிடுவார்கள் 
ஓயாமல் வந்து சந்திப்பார்கள் 
ஒட்டுப்பிச்சை கேட்பார்கள்   
காலத் தொட்டு  வணங்குவார்கள் 
வாரிவிட பள்ளம் பறிப்பார்கள்
தேடிவந்து ஒட்டு கேட்டுடுவான் 
மோடிவித்தை காட்டிடுவான் - கொஞ்சம்  
அசந்து போயி நின்னா  - நம்மள 
அம்மணமாக நிறுத்திடுவான் !
பொய் எல்லாம் மெய்யாவே சூளுரைப்பான் 
பேச்சாலே புத்திய சலவை செஞ்சிடுவான்
அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைகாட்டிடுவான் 
அப்புறம் பார் யாருன்னு அவன் காட்டிடுவான் 
ஆள்காட்டி விரலிலே மையி
நம்ம ஆயுளையே அடிமையாக்கும் 
அவன் சொல்லும் பொய்யி 
முடியாத திட்டக்களுக்கு 
முன்னுரை வைப்பான் - பின்னால 
முடிச்சித்தர கேட்டா  - நம்ம
மூச்சை நிறுத்துவான் !
சேரியெல்லாம் - இப்ப 
சந்தனமா மணக்கும்
 செத்தவனுக்கெல்லாம்  உசுரு 
தானாவந்து  பொறக்கும் - இப்போ 
சமத்துவம் எவன்மனசுலயும் இருக்கும்
ஆட்சி ஏறி வந்தபின்னே சாதிவெறி தெறிக்கும்
மாற்றங்களை எதிர்பாக்கும் நமக்கு 
ஏமாற்றங்கள்  மட்டுமே நிலைக்கும் 
யோசிப்போம்  யாசியோம் 
விடியல் வரும் நாள் விரைவிலே -அது 
நம் ஒத்த விரலிலே ! விரலிலே !

  மு. ஏழுமலை   


 

மேலும்

மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2019 3:38 pm

34. கன்னித்தாலாட்டு. . . 

கன்னித்தாய் பாடுகிறேன் தாலாட்டு
கண்மணியே கண்ணுறங்கு அதை கேட்டு 
கவலை வேண்டாம் உனக்கிங்கே 
உனக்காக இருக்கிறேன் நானிங்கே 
மூழ்காமல் முத்தெடுத்தேனே - உன்னை
முழுமனதாய் தத்தெடுத்தேனே
செல்லமே. . . தங்கமே. . கண்ணுறங்கு 
என்னுள்ளமே  உனக்குத்தான் நீயுறங்கு . . .  (கன்னித்தாய்)

மாங்காய் நானும் தின்னவில்லை
மசக்கையில் நானும் இருந்ததில்லை 
சாம்பலெல்லாம் ருசித்ததில்லை 
பத்தியமேதும் இருந்ததில்லை 
பைத்தியமாகி போறேனே நொடியும் 
உன்னை காணாவிடில் . ..  (கன்னித்தாய் )
வயிற்றில் உன்னை சுமக்கவில்லை
வந்தாயே வசந்தமாய் என்வாழ்வில் 
இலையுதிர் காலம் இனியுமில்லை 
நீதானே இசையானாய் என்நாவில்
தாயாகி மகிழ்கின்றேன் - உனக்கு 
தாலாட்டு பாடுகின்றேன் . .  (கன்னித்தாய் ) 
வசனம்: நீ அம்மான்னு சொல்லயில - நான் 
ஆனந்தத்தில் மூழ்குகின்றேன் - உன்
பிஞ்சு விரல் தொடுகையில் 
நெஞ்சு குளிர்ந்து மயங்குகின்றேன் 
உன்விழியுருட்டி பார்க்கையிலே -  நான் 
விண்மீனாய் மின்னுகின்றேன் - என்
 சொந்தமாக வந்தாயே - வாழ்வில் 
சந்தங்களை தந்தாயே
பிள்ளைபெற தகுதியிருந்தும் 
தத்தெடுத்தேனே உன்னைத்தானே - உன்ன  
பெத்தெடுத்தவ தெருவுல போட்டதால 
(பாட்டு)
கன்னித்தாய் ஆனேனே செல்லமே உனக்காக 
ஊர்பேச்சு எனக்கெதுக்கு உன்பேச்ச கேட்டபின்னே 
தத்தெடுப்பதில் குத்தமில்ல தெரிஞ்சுக்கோங்க 
குப்பைவாழ் குழந்தைகளுக்கு வாழ்வுதாங்க .

மு. ஏழுமலை   
 

   

மேலும்

படைப்புக்கு பாராட்டுக்கள் 22-Mar-2019 11:12 pm
மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2019 11:06 am

33. பனித்துளியோடு உரையாடல் 

தொட்டபோது தொலைந்து போனாய் 
கைப்பட்டபோது கலைந்துபோனாய் 
அருகரமர நினைத்தபோது - ஆவியாய் 
மறைந்து போனாய் - எண்ணங்களை
ஆயிரம் ஆயிரமாய் பிரதிபலிக்கிறாய்
நாம் ஆசையோடு அணைக்கையில் - அழகே 
என்னை ஏமாற்றி செல்கிறாய் 
வெண்பனியே. . .  நல்வெண் முத்தே. . 
வெள்ளைமனதில்லை போலும் உனக்கும் 
விளையாட வரும் வாலிபனை
விம்மி  அழச்செய்கிறாய்
 வினைசெய்யும்  நங்கைபோல 
புல்வெளியில் பூத்து குலுங்குகின்றாய் 
பச்சியிலையில் பாடித்திரிகின்றாய்
நான் புன்னைகையோடு தொட்டால் - ஏனோ
புதிரான்கின்றாய் 
முகிலோடு உறவாடுகின்றாய் 
கதிரோடும் காதல் கொள்கின்றாய்
காளையான்  தொட்டால்மட்டும் - ஏனோ 
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்

ஏனிந்த மோகம் ? 
என்மீது கோபம் 
என்னவளும் சொன்னாலோ 
என்னை நீ தீண்டக்கூடாதென்று! 

மு. ஏழுமலை


 மேலும்

மு ஏழுமலை - மு ஏழுமலை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2019 11:10 am

34. வாழ்க்கை பாடம்

என் தாயிடம் கற்றேன் அன்பு
 என் தந்தையிடம் பெற்றேன் அறிவு
பாடசாலையில் கற்றேன் நல்லொழுக்கம் 
என் ஆசிரியரிடம் கற்றேன் பணிவு
பார்போற்றும் கல்வியறிவு 
நண்பனால் வந்தது நல்லுறவு - ஆனால்
பெண்ணே. . .பேதையே. . .
உன்னால் நான் கற்றுக்கொண்டது 
உலகம் என்னவென்று! 
    மு. ஏழுமலை 

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவரை பின்தொடர்பவர்கள் (1)

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே