ஹைக்கூ கவிதைகள் : மழை; கோபம் கொண்ட அவளை...
ஹைக்கூ கவிதைகள் : மழை; கோபம் கொண்ட அவளை கட்டியணைக்க நினைத்தேன்
கொட்டி அழித்தாள் பெரும் வெள்ளமாய்
மணமில்லா மலரானாள் மனமிருந்தும் கைம்பெண்
நானும் நாயும் தெருவோரம்
பட்டினியில்
படித்துக்கொண்டும் ருசித்துக்கொண்டும் இருக்கிறேன் திகட்டவில்லை
இதழ்கள்.
பழுக்கா கனி
சுதந்திரமும்
உரிமையும் சேரிகளுக்கு மட்டும்.
சமத்துவம் உண்டு மகத்துவம் உண்டு சாதித்துவத்திற்கே முதலிடம்.
சேரியும் ஊரும் ஒன்றே
பாகுபாடுமில்லை வேறுபாடுமில்லை
ஒட்டுச்சாவடி வரை.
கண்டிட ஏங்கினேன்
கண்முன் வந்தாய்
வறுமை போக்கும் மாயக்காரியோ
தீக்குச்சி எரித்தது குடிசையையும் குடும்பத்தையும்
சாதியை அல்ல!
ஆடை கட்டி அழகாய் நெளிந்தாள் ஆசையைக் கூட்டினாள் ஏங்கின சாலையோர குழந்தைகள் ஆடையின்றி!
நிலவுக்கு சக்களத்தி
நின்னக்காலில் தெருவினில்
மின்விளக்கு
மணம் சூடவில்லையே என்ற ஏக்கத்தில் முதிர்கன்னிகளாய்
சாலையோரப் பூக்கள்!
[4/16, 3:47 PM] eks msh: ஹைக்கூ :
உன்னிடம் எதிர்ப்பார்க்கிறேன் காதலை அல்ல கருணையை
பிச்சைக்காரன்
உன் கோடை விழியில் பற்றியது தேகம் மட்டுமல்ல மோகமுந்தான்.
முதிரா இரவானது
என் வானம்
முதிர்கன்னிகளை கண்ட முதல்
தொட்டால் மலருமாம் பூக்கள் தொடவேயில்லை பூக்கின்றாய்..
ஓ... நீ தொட்டாஞ் சிணுங்கியோ