கொல்லும் கொரோனா

கொல்லும் கொரோனா ...
உகானில் உக்கிரம் கொண்டாய்
உயிர்வதை செய்து மகிழ்ந்தாய்
உலகையே ஆட்டிப்படைகின்றாய்
உன் கட்டுப்பாட்டுக்குள்
சாதிவெறி மனிதரைகளை போல்!
புதிது புதிதாய் வரும் நோய்களுக்கு
தினுசு தினுசாய் உடன் பெயர் சூட்டும்
என் ஆராச்சியாளர்கள்
திக்கற்று திகைக்கின்றனர்
தீர்க்கும் மருந்து காணமுடியாமல்
குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர்
இரக்கமின்றி
மக்களோ பரிதவிக்கின்றனர்
உறக்கமின்றி - ஈரேழு திங்களாய்
வாழமுடியவில்லை அச்சமின்றி !
அவசரகோலமாய் அரசின்
உத்திரவுகளும் அகிலவாழ் மக்கட்கு
தருகிறது பெரும் வேதனை
போர்களமாய் எங்கள் வாழ்க்கை !
நிம்மதி இழந்தோம்
நீள்துயில் மறந்தோம்
உறவுகள் பறிகொடுத்தோம்
உணர்வுகளை மட்டுமே
உயிராய் கொள்கிறோம் !
கொத்துக்கொத்தாய் உயிர் கொலை ஏன்
குரல்வளை நெறிக்கும் கொரோனவே
இரக்கம் இல்லையோ உன்னில்
இல்லை இருக்கிறாயோ
இறக்கட்டும் இந்த மனித
பேராசை புழுக்கள் மண்ணில் என்று!
செல்லிட பேச்சியால் ஏற்கனவே
உறவுகள் சிதைந்து
சின்னாபின்னமாகிவிட்டது
உயிர் குடிக்கும் கொரோனாவே
உன்னால் உறவுகள் புதைக்கப்படுகிறது
நேரில் கண்டாலும் நெருடலாய்
பேசமுடியவில்லை பேரானந்தமாய்
அல்லா ஏசு சிவன் - இவர்களில்
யார் காப்பார் எங்கள் சீவன்
எதிர்பார்ப்பில் உலகமே
என்று தீரும் எங்கள் சோகமே
மரண ஓலமும் பயமும் மட்டுமே
எங்கள் இதயத்துடிப்பில்
போதும் உன் பாதக செயல்
பொறுத்தருள்க எங்க பாவ செயல்!

இவன் ம்மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (20-Mar-20, 12:33 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 198

புதிய படைப்புகள்

மேலே