எஸ்தர் சுதா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : எஸ்தர் சுதா |
இடம் | : சிங்கப்பூர் |
பிறந்த தேதி | : 11-Oct-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Mar-2020 |
பார்த்தவர்கள் | : 125 |
புள்ளி | : 19 |
தமிழ் மீது நான் கொண்ட ஆர்வத்தினால் வெளிப்படும் என் எண்ணத்தின் படைப்புக்களை சமர்ப்பிக்க
நீண்ட நாள் நான் தேடி இப்போது தான்
கண்டேன் எழுத்து.காம் தளத்தை
தொடரும் என் தமிழ் பயணம் ....
என் பிஞ்சு விரல்களால்
நான் பிடித்து எழுதிய
என் முதல் எழுத்தாணி
பென்சில் ...
என் எழுத்துக்கு
முத்தான முகவரி
நீ தந்தாயே ...
அன்று தொடங்கிய எழுத்து
இன்று வரை தொடர்கிறது ..
இனியும் தொடரும்…
கூண்டு கிளிகள் சில
பிக்பாஸிலே
கூண்டு பறவைகள் பல
ஊரடங்கிலே
பல்வேறு மனிதர்கள்
ஓரே வீட்டில்
பிக் பாஸிலே
நம் குடும்பத்தார்
நம் வீட்டில்
நம் அருகிலே
அங்கு
அன்பானவர்கள்
பிரிந்து செல்லும்
நேரம் வரும்
இங்கு
அன்பானவர்கள்
புரிந்து கொள்ளும்
நேரமிது
கணவனின் காதல்
கண்ணுமணியான காதல்
கனவிலும் மறவேன்....
கருவறையிலும் கண்டேன்...
காலத்திற்கும் உன்னோடு
கரம் பிடித்து உலா வருவேன்...
கடைசிவரை உன் கருவிழிகளில்
நான் மட்டுமே...
கணவனின் காதல்
கண்ணுமணியான காதல்
கனவிலும் மறவேன்....
கருவறையிலும் கண்டேன்...
காலத்திற்கும் உன்னோடு
கரம் பிடித்து உலா வருவேன்...
கடைசிவரை உன் கருவிழிகளில்
நான் மட்டுமே...
ஏற்றின கவிதையில் பிழை வந்தால் எப்படி திருத்துவது ???
கண்களால் பேசின
காதல் மொழிக்கு
எழுதாமலே
அர்த்தங்கள் புரியும்
எழுத்துக்களால் பேசின
காதல் மடலுக்கு
பார்க்காமலே
உணர்வுகள் புரியும்
புரிந்த காதலுக்கு
பிரியா விடை கொடு ...
என்னதான்
விமானத்தில் பறந்து
விண்ணை ரசித்தாலும்
பூமியிலிருந்து
மேகத்திற்குள் ஒளியும்
விமானத்தை பார்க்க
விழிகள் வியந்து
பரவசமாக பார்க்கும்
ரசிக்கும் ரசிகை நான்
ஏற்றின கவிதையில் பிழை வந்தால் எப்படி திருத்துவது ???
எழுத்து.காம் ல் படைத்தேன்
என் கவிதைகளை
வலை தளத்தில்
வளம் வந்தது என் கவி
காணாத உறவுகள்
காண்கிறது என் கவியை
என் கவியாற்றல்
வலிமை கண்டது
என் தமிழார்வம்
ஆரம்பம் கொண்டது
என் தமிழாக்கதிற்கு
ஊக்கம் தந்தது
மின்னல் வேகத்தில்
மின்னிடுகிறது தமிழ் ஆக்கங்கள்
எண்ணற்ற ஆக்கங்களை
எட்டுதிக்கம் எட்ட செய்கிறது
எத்தனையோ படைப்பாளிகள்
எங்கோ இருந்தாலும்
அத்துனை பேருக்கும்
அரவணைப்பு அளித்து
ஆனந்தம் கொடுக்கிறது
தமிழர்களை தமிழால்
தாங்கி தரம் உயர்த்துகிறது
எழுத்தால் பிணைகிறோம்
எழுத்து.காம் ல் பகிர்கிறோம்
என்றும் தொடரட்டும்......
என்றென்றும் வளரட்டும் .......
பிறந்தது முதல
பார்த்த அன்பு
விளையாடும் வயதில்
விட்டு கொடுக்காத அன்பு
விடுமுறை நாட்களில்
விடாது துரத்தும் அன்பு
கல்வி கற்றாலும்
கண்களில் மறைந்திருக்கும் அன்பு
வேலைக்குச் சென்றாலும்
வேறு ஒருவரிடமும் கிடைக்காத அன்பு
திருமணம் ஆனாலும்
திரும்பி பார்க்கும் அன்பு
பிள்ளை பெற்றாலும்
பிரியாத அன்பு
பிரிந்தது ஏனோமறைவுகளின் போது
மௌனமாய் கலைந்தது ஏனோjQuery17106244548435374765_1584956434767
காலங்கள் கடந்தாலும்
கடைசி வரை தேடும் அன்பு
மீண்டும் தலை எடுக்கும் அன்பு
தலைமுறை தலைமுறையாய்
தழைக்கட்டும் நிரந்தரமாய்
நிலவட்டும் உள்ளத்தில் ...........