எழுத்து காம்

எழுத்து.காம் ல் படைத்தேன்
என் கவிதைகளை

வலை தளத்தில்
வளம் வந்தது என் கவி

காணாத உறவுகள்
காண்கிறது என் கவியை

என் கவியாற்றல்
வலிமை கண்டது

என் தமிழார்வம்
ஆரம்பம் கொண்டது

என் தமிழாக்கதிற்கு
ஊக்கம் தந்தது

மின்னல் வேகத்தில்
மின்னிடுகிறது தமிழ் ஆக்கங்கள்

எண்ணற்ற ஆக்கங்களை
எட்டுதிக்கம் எட்ட செய்கிறது

எத்தனையோ படைப்பாளிகள்
எங்கோ இருந்தாலும்

அத்துனை பேருக்கும்
அரவணைப்பு அளித்து
ஆனந்தம் கொடுக்கிறது

தமிழர்களை தமிழால்
தாங்கி தரம் உயர்த்துகிறது
எழுத்தால் பிணைகிறோம்
எழுத்து.காம் ல் பகிர்கிறோம்

என்றும் தொடரட்டும்......
என்றென்றும் வளரட்டும் .......

எழுதியவர் : எஸ்தர் சுதா (20-Mar-20, 2:47 pm)
சேர்த்தது : எஸ்தர் சுதா
Tanglish : eluthu kaaum
பார்வை : 149

மேலே