திருக்குறள் கிறித்துவ நூல் இல்லை 3 2

திருக்குறள் கிறிஸ்தவ நூல் - இல்லை !
+++
யாதுமறியான்.
+++
3/2
இழிவானவரா இயேசு கிறித்து ?
---


3- ஒருமுறை இயேசு கப்பர்நகூமில் இருந்த போது

" பேய் பிடித்த இருவர், "இறை மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?" என்று கத்தினார்கள்.

பேய்கள் அவரிடம் , "நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் , அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்" என்று வேண்டின.

அவர் அவற்றிடம், "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.
( மத்தேயு 8: 6,31 ,32 )

இந்த நிகழ்விலும் எந்தவித தொடர்பும் இல்லாத ஆயிரக்கணக்கான பன்றிகள் உயிரை இழந்தன- கொல்லப்பட்டன .

4- சில சமயம் அற்ப காரணங்களுக்காக உயிர்கள் கொல்லப்பட இயேசுவே காரணமாக இருந்துள்ளார் . நற்செய்தி கூறும் இந்த நிகழ்வை பாருங்கள் .

"அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, "உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர். "

அதற்காக இயேசு,

"ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து" என்றார். "
( மத்தேயு 17: 24 & 27 )
இந்த நிகழ்விலும் கூட , ஒர் அப்பாவி மீன் தனது உயிரை இழக்கிறது .

அன்பே உருவான இயேசு ஏன் இது போன்ற உயிர்க் கொலைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ? இதனைப் புரிந்து கொள்ள ,
கொல்லாமை , புலால் மறுத்தல் போன்றவற்றில் தந்தையாகிய கடவுளின் கொள்கை என்னவென்று நாம் புரிந்து கொள்வது அவசியம் .

எழுதியவர் : யாதுமறியான் . (27-Jun-25, 5:29 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 10

மேலே