திருக்குறள் கிறித்துவ நூல் இல்லை 2 2

திருக்குறள் கிறிஸ்தவ நூல் - இல்லை !
+++
யாதுமறியான்.
+++
2/2
இழிவானவரா இயேசு கிறித்து ?
---
அயலானை, ஏன் , பகைவனைக் கூட அன்பு செய்யுங்கள் என அதிகமாகப் போதித்த இயேசு கிறித்து, பிற உயிர்களைக் கொல்லக்கூடாது என போதிக்கவே இல்லை. மாறாக, பிற உயிர்கள் கொல்லப்படுவதற்கு அவரும் காரணமாக இருந்துள்ளார். நற்செய்தி நூல்கள் கூறும் சில நிகழ்ச்சிகளைக் காண்போம்.

1- ஒரு முறை இயேசு பெத்தானியாவில் இருந்து நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பசியுடன் இருந்த அவர்,
" வழியோரத்தில் ஓர் அத்தி மரத்தை அவர் கண்டு அதன் அருகில் சென்றார். அதில் இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணாமல், "இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்" என்று அதைப் பார்த்துக் கூறினார். உடனே அந்த அத்தி மரம் பட்டுப் போயிற்று.
( மத்தேயு 21:19 )

தனது பசிக்கு பழங்களை அளிக்காத அந்த அத்தி மரத்தைச் சபித்து கொன்று விடுகிறார். இதில் அந்த அத்தி மரம் செய்த தவறுதான் என்ன? அப்போது கனிதரும் காலம் கூட இல்லையே .

2- இன்னொரு நிகழ்வில்,
இயேசுவின் சீடர்களான பேதுருவும் பிறரும் , கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இரவு முழுதும் மீனே கிடைக்காமல் தவித்துப் போயினர்.
அப்போது அங்கு வந்த இயேசு கிறித்து,
"படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. "
( யோவான் 21: 6 &11 )

இந்த நிகழ்விலும் ஏராளமான மீன்களின் உயிரிழப்பிற்கு இயேசுவே காரணமாக இருந்துள்ளார் .

....தொடரும் - 3/2 .

எழுதியவர் : யாதுமறியான் . (27-Jun-25, 5:33 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 11

மேலே