மேரி சுகந்த ரத்தினம் 260625

நிதானம்... தெளிவு.. பொறுமை
பெருந்தன்மை.. கல்வி அறிவு..
இவற்றின் ஒட்டுமொத்த
அணிவகுப்பின் அடையாளம்
அது மேரி சுகந்த ரத்தினம்..

இவரிடம் உண்டு நல்ல
உதவும் குணம்..
இல்லை சிறிதும் கர்வம்..

ஒரு கவிதையைப் பெயராய்...
ஒரு பெயரைக் கவிதையாய்
வைத்துக் கொண்டிருக்கும்
மேரி சுகந்த ரத்தினம்..

இவர் பிறந்தது ஜூன் மாதம்..
அதனால் கிடைத்தது பணியில்
மேலும் ஒரு வருடம்.. இது
மாணவர்களுக்கு இறைவன்
கொடுத்த வரம்..
எலக்ட்ரானிக்ஸ் தொழில்
நுட்பம் மேலும் வளரும்..

மேரி பணி புரியும் கல்லூரி.. அது
ஆகும் பொறியியல் சோலை...
பூ பறிப்பது போன்று எளிதாய்
இருக்கும் மாணவனுக்கு
நிறுவனங்களில் நல்ல வேலை.

லட்சியங்கள் தொலைத்த
மாணவன் கூட இவரது
கற்பித்தலில் கல்விக் கடல்
நீந்தி கரை சேர்வான்..
ஆர்வம் திறமைகளில் மூழ்கி
முத்துக் குளிப்பான்...

மேரி சுகந்த ரத்தினம்...
நந்தவன வசந்தங்கள் வரமாகும்..
வானமும் வசமாகும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
👍👏🍫🪷🌺

எழுதியவர் : இரா. சுந்தரராஜன் (27-Jun-25, 6:27 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 28

மேலே